LOADING

Type to search

இலங்கை அரசியல்

யூலைப் படுகொலைகளின் கோரமான நினைவலைகள் ஆயுள் உள்ளவரை எம் மனங்களில் அமைதியை நிலைகொள்ள வைக்காது!

Share

“யூலைப் படுகொலைகள்” இடம் பெற்ற காலம் 1983ம் ஆண்டு யூலை மாதத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அல்ல. இரண்டு வார காலம் வரை அந்த ‘கொரூரம்’ இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் ‘அரங்கேற்றப்பட்டன’. அரச பயங்கரவாதிகளான இலங்கையின் இனவாத ஆட்சியில் இருந்த ஜனாதிபதியும் பிரதமர் மற்றும் அமைச்சர்களும் காடையர்களும் காவல்துறையினரும் இணைந்து நடத்திய அந்த இரத்தம் தோய்ந்த காலப்பகுதியில் இனம் சார்ந்து நடத்தப்பட்ட அந்த படுகொலைகள் நன்கு திட்டமிட்டு நடத்தப்பெற்றன என்பதை உலகமே அறிநிதிருந்தது.

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக் கதிரையில் அமர்ந் முதலாளித்துவக் கட்சிகள் தமிழ் இளைஞர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக இழைத்து வந்த கொடுமைகள் மற்றும் அடக்கு முறைகள் எம் இளைஞர்களையும் மாணவர்களையும் சிந்தித்து நடக்க வேண்டிய காரணத்தாலும் சோதனை என்ற பெயரில் அரசாங்கத்தின் இனவாதப் படைகள் நடத்திய அராஜகங்களும் அடக்குமுறைகளும் இலங்கை அரசுக்கு எதிராக ‘கொரில்லா’ யுத்த முறை சார்ந்த தாக்குதல்களை நடத்த திட்டங்கள் தீட்டுவதும் அவற்றை சந்தர்ப்பம் சரியாக அமைந்தால் எதிரியை அழிக்கும் முயற்சியில் உடனடியாக இறங்கலாம் என்ற என்ற கருத்துக்களின் அடிப்படையில் அப்போது தமி9ழ் இளைஞர் விடுதலை அமைப்புக்கள் போராடங்களை நடத்த தயாராகின.

இவ்வாறான நிலையில் நாம் தற்போது இந்த விடயத்தில் உடனடி நடடிவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசர விடயமாக இருந்த நிலையில், உலக அரசியலில் இனம் மற்றும் மொழிகளின் அடிப்படையில் மக்களை கூறுபோடுவதில் உலகெங்கும் சுகபோகங்களை அனுபவிக்கும் அந்தந்த தேசங்களை ஆளும் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்ற வகையில் நாட்டின் வளங்களைச் சுரண்டி தங்களை வளர்த்துக் கொளள முயலும் வேளையில்,ஏமாற்றம் தரும் அரசியல்வாதிகள் தங்கள் காய்களை நகர்த்திய வண்ணம் தங்கள் பதவிகளை எப்போதும் தக்கவைத்துக் கொள்ளவே முயல்வார்கள். குறிப்பாக முதலாளித்துவப் போக்குள்ள அரசியல்வாதிகள் அந்த தேசத்தின் மக்களில் விவசாயிகளாகவும் தொழிலாளர்களாகவும் உள்ள மக்களை இனம் மற்றும் மதம் சார்ந்து பிரித்து வைப்பதே தங்கள் முதற்பணி என்பதை கவனித்துச் செய்வார்கள்.

அவ்வாறு தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அவர்களை மதம் மற்றும் மொழி சார்ந்து பிரிந்து நிற்கச் செய்தால் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் போராட்டம் என போராடும் சக்தியை அந்த உழைக்கும் வர்க்கம் குறைத்துக் கொள்ளும் என்ற உண்மையை முதலாளித்துவம் சார்ந்து தங்கள் அரசியலை நகர்த்திச் செல்லும் அரசியல்வாதிகள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.
இவ்வாறான ஒரு அரசியல் காய் நகர்த்தல்களே இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் அரசியல் முதலாளித்துவ அரசியல்வாதிகள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதமாக விளங்கியது. இதனால் தான் இலங்கையில் சுதந்திரத்திற்கு முன்னர் உழைக்கும் மக்கள் என்ற ஒரே வர்க்கமாக தங்கள் உரிமைகளுக்காக போராடியவர்கள் பின்னாளில் மொழிசார்ந்தும் மதம் சார்ந்தும் பிரித்தாளப்பட்டார்கள். இதன்’ விளைவாக இலங்கையில் இனவாதம் இருப்பக்கங்களிலும் பிரயோகிக்கப்பட நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

இவ்வாறான திட்டமிட்ட பிரித்தாளும் தந்திரத்திரத்தில் முக்கியமானவர்களாக விளங்கிய டி. எஸ் சேனநாயக்க மற்றும் எஸ். டப்ளியூ. ஆர். டி. பண்டாரநாயக்க அடங்கிய பல சிங்கள தேசிய அரசியல்வாதிகளோடு தமிழ் அரசியல்வாதிகளும் கைகோர்த்து நின்றார்கள் என்பதை சாதாரண தமிழ் மற்றும் சிங்கள மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இதனால் அவர்களும் இனவாதச் சேற்றில் அள்ளுண்டு செல்லவேண்டியவர்களாக ஆக்கப்பட்டார்கள்.

இவ்வாறாக இயற்கை வளங்களையும் சாதகமான கால நிலையையும் கொண்ட இலங்கைத்தீவில் அமைதி இன்மை ஏற்பட இனவாதம் காரணமாக விளங்கியது. பெரும்பான்மை இன சிங்கள மக்களை திருப்திப் படுத்தும் வகையில் சிங்களத் தலைவர்களின் தலைமையில் இயங்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி பதவிக்கு வந்து மாணவர்களின் பல்கலைக் கழக பிரவேசத்தில் தரப்படுத்தலை அறிமுகம் செய்தது. இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்கள் சாத்வீகப் போராட்டங்களை ஆரம்பித்தார்கள். குறிப்பாக ‘தமிழ் மாணவர் பேரவை’ போன்ற மாணவர்கள்pன அமைப்புக்கள் போராட்டங்களை நடத்துவதற்காக மாணவர்களையும் பொது மக்களையும் ஒன்று திரட்டினார்கள். அப்போது அந்தப் போராட்டங்களை அடக்கும் வகையில் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கைதுகள் ஆகியவற்றைச் செய்ய இலங்கைப் பொலிசாருக்கு அரசாங்கங்கள் அழுத்தங்கள் கொடுக்கத் தொடங்கின. இவ்வாறான சந்தர்ப்பங்களில் தான் மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகளா டேவிற்சன் மற்றும் பொன் சிவகுமாரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வாறான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களே பின்னாளில் ஆயுதங்கள் ஏந்திய போராட்டங்களாகவும் தாக்குதல்ககளாகவும் மாற்றம் பெற்றன. இந்த மாற்றங்களை தமிழ் மக்களும் வரவேற்று தங்கள் ஆதரவை வழங்கினார்கள். தமிழ் மக்களுக்காக விடுதலையைப் பெற்றுக்கொள்ள் ‘ஆயுதப் போராட்டம்’ ஒன்றே உகந்தது என்பதை மக்களும் மாணவர்களும் இளைஞர்களும் ஏற்றுக்கொணடார்கள்.

இந்த போராட்ட வடிவத்தின் வளர்ச்சியானது 1983ம் ஆண்டு தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடத்தப்பெற்ற தாக்குதலில் 23 இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட இந்த சம்பவம் சிங்கள அரசியல்வாதிகள் பலரையும் சில தமிழ் அரசியல்வாதிகளையும் அதிரச் செய்தது. சிங்கள இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டதற்கு இனவாத சாயம் பூசப்பட்டு பின்னர் அது இனக்கலவரமாக வெடித்தது. அந்தக் காலப்பகுதியில் சுமார் ஒரு வார காலத்திற்கு இலங்கை எங்கும் நடத்தப்பெற்ற இனவாதக் கொலைகளே இன்றும் நாம் 43 வது ஆண்டாக நினைவு கூர்கின்ற ஒரு துயரங்கள் நிறைந்த நினைவுகளாக எம்மோடு பயணிக்கின்றது. பின்னரும் தொடர்ச்சியாக நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு இரையாகிப் போன எம் உறவுகளை நாம் உருக்கத்துடன் நினைவு கூறும் இந்த யூலைப்டுகொலை அனுஸ்டிப்பை நாம் அனைவரும் உணர்வுகளைப் பகிர்ந்து கடந்து செல்வோம்.!