LOADING

Type to search

உலக அரசியல்

ரஷியா ராணுவ விமானம் விபத்து – 29 பேர் உயிரிழப்பு

Share

கிரிமியா தீபகற்பத்தின் மீது பறந்துகொண்டிருந்தபோது ரஷியாவின் அன்டோனோவ்-26 ராணுவ விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். விமான விபத்தில் 29 பேர் உயிரிழந்ததை ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. நேற்று அங்கு உள்நாட்டு நேரப்படி மாலை 6 மணியளவில், கிரிமியன் தீபகற்பத்தின் மீது திட்டமிடப்பட்ட பயணத்தில் இருந்த ஏ.ன்-26 ராணுவ போக்குவரத்து விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் ஏ.என்-26 விமானம் விபத்துக்குள்ளான இடத்தை கண்டுபிடித்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்கள் மற்றும் 23 பயணிகளும் உயிரிழந்தனர் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானத்தின் சிதறிய பாகங்களில் வெளிப்புற தாக்குதலுக்கான எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறே விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கி உள்ளது.