ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ படத்தின் பதாகை வெளியானது
Share
ராகவா லாரன்ஸ், கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ படத்தின் பதாகை வெளியானது. நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா 4’ மற்றும் ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ‘மஹாவீர் கர்ணா’ படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்குகிறார். இந்த நிலையில், கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸின் முதல்காட்சி பதாகை தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதுகுறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பதிவில், “நமது புராணங்களில் உள்ள மிகச்சிறந்த புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்றான கர்ணன் வேடத்தில் நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பாக்கியமும் கொள்கிறேன். இந்த கதாபாத்திரம் என்னைத் தேடி வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த வாய்ப்பை என்னிடம் கொண்டு வந்து, இந்த திரைப்படம் உருவாக காரணமாக இருந்த இயக்குநர் ரமேஷ் வர்மாவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் ஆதரவும் தேவை” என்று தெரிவித்துள்ளார்.















