LOADING

Type to search

சினிமா

“ரேனிகுண்டா 2” படத்தின் முன்னோட்டம் வெளியானது

Share

இயக்குநர் பன்னீர்செல்வத்தின் ‘ரேனிகுண்டா 2’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ரேனிகுண்டா’. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் 5 சிறுவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவானது. ஜானி, சஞ்சனா சிங், தீப்பெட்டி கணேசன் மற்றும் சனுஷா நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருந்தார். ‘ரேனிகுண்டா’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சனுஷா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த நடிகை சனுஷா 2000-ம் ஆண்டு வெளியான ‘தாதா சகேப்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். மலையாளத்தில் பல படங்களில் நடித்தாலும், விக்ரம் நடித்த ‘காசி’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு ‘சுந்தரா டிராவல்ஸ்’ ‘பீமா’, ‘நாளை நமதே’, ‘எத்தன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘கொடி வீரன்’ ஆகிய படங்களில் நடித்து தமிழில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார் சனுஷா. இந்த நிலையில், ‘ரேனிகுண்டா 2’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.