LOADING

Type to search

சினிமா

‘லவ்வர் பாய்’ படத்தின் மூலம் மீண்டும் மறுபிரவேசம் கொடுக்கிறார் நடிகர் ஜீவன்

Share

‘லவ்வர் பாய்’ படத்தின் மூலம் மீண்டும் மறுபிரவேசம் கொடுக்கிறார் நடிகர் ஜீவன். ‘யுனிவர்சிட்டி’, ‘காக்க காக்க’, ‘நான் அவனில்லை’, ‘திருட்டுப் பயலே’ போன்ற படங்களில் நடித்த அவர், அசோக்குமார் இயக்கத்தில் அர்ஜித் சங்கர், கீர்த்தி ஷெட்டி இணையும் ‘லவ்வர் பாய்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் மூலம் ஜீவனின் கம்பேக் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். தமிழில் ‘யுனிவர்சிட்டி’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகி இருந்தாலும், சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர், நடிகர் ஜீவன். இதையடுத்து அவர் ‘நான் அவனில்லை’, ‘திருட்டுப் பயலே’, ‘மச்சக்காரன்’, ‘தோட்டா’, ‘நான் அவனில்லை 2’ ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார். பின்னர் 6 ஆண்டுகள் கழித்து 2015-ம் ஆண்டு ‘அதிபர்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு பல ஆண்டு இடைவெளிக்குப் பின் ‘பாம்பாட்டம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஜீவன், புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அசோக்குமார் இயக்கத்தில், அர்ஜித் சங்கர் மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் ஜீவன் இணைந்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜீவன் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருப்பது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோ சார்பில் சுதன் சுந்தரம் இப்படத்தை தயாரிக்கிறார்.