LOADING

Type to search

உலக அரசியல்

வனுவாட்டு நாட்டில் படகு கடலில் கவிழ்ந்து விபத்தில் 30 பேர் மாயமாகினர்

Share

வனுவாட்டு நாட்டில் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 30 பேர் மாயமாகினர். பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு வானுவாட்டு. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வானுவாட்டில் வடக்கு பகுதியில் உள்ள அம்பெ தீவில் இருந்து சாண்டோ தீவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை படகு சென்றது. அந்த படகில் 45 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் கடலில் தத்தளித்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்த 15 பேரை பத்திரமாக மீட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் கடலில் மூழ்கி 30 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.