LOADING

Type to search

சினிமா

விமல், ஸ்ரேயா நடித்த “சண்டக்காரி” படத்தின் முன்னோட்டம் வெளியானது

Share

விமல், ஸ்ரேயா நடித்த ‘சண்டக்காரி’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. ‘திரிஷ்யம்’ பட இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த காதல் நகைச்சுவை குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’. பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படம், முன்னணி சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ளது.

திலீப் மற்றும் மம்தா மோகன்தாஸ் நடிப்பில், ஜீத்து ஜோசப்பின் 2012-ஆம் ஆண்டு மலையாளப் படமான ‘மை பாஸ்’ படத்தின் மறுப்பான இந்தப் படத்திற்கு, தற்போது ‘சண்டக்காரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரபு மற்றும் சத்யன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘சண்டக்காரி’ ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் என்று கூறப்படுகிறது. காதல், நகைச்சுவை, மோதல், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் சரியான அளவில் கலந்து உருவாகியுள்ள ‘சண்டக்காரி’ ரசிகர்களுக்கு ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ‘சிவாஜி’ படப்புகழ் ஸ்ரேயா, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக விமல் நடித்துள்ளார்.அதிகாரி – ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும் சம்பவங்களும், மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும் கதையை சுவாரஸ்யமான பாதையில் நகர்த்துகின்றன. காதல், கோபம், ஈகோ என இருவருக்கும் இடையேயான ‘சண்டை’தான் படத்தின் மிகப்பெரிய சுவாரஸ்யமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.