LOADING

Type to search

சினிமா

‘வேட்டுவம்’ படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்?

Share

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித், கடைசியாக ‘தங்கலான்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது ‘வேட்டுவம்’ என்ற புதிய படத்தை எழுதி இயக்கி வருகிறார். நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்து வருகின்றனர். மேலும், அசோக் செல்வன், கலையரசன், லிங்கேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை சோபிதா துலிபாலா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில், ‘வேட்டுவம்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.