LOADING

Type to search

கனடா அரசியல்

ஸ்காபுறோ மற்றும் மார்க்கம் நகரங்களின் எல்லைக் கோடாக விளங்கும் ஸ்டீல்ஸ் அவென்யூ வீதி விரிவாக்கத்திற்கு ஒன்ராறியோ அரசும் நிதியுதவி வழங்குகிறது

Share

ஒன்றாரியோ மாகாணத்தின் முக்கிய நகரங்களாக உள்ள ஸ்காபுறோ மற்றும் மார்க்கம் நகரங்களின் எல்லைக் கோடாக விளங்கும் ஸ்டீல்ஸ் அவென்யூ வீதி விரிவாக்கத்திற்கு ஒன்ராறியோ அரசும் நிதியுதவி வழங்குகிறது. நீண்ட காலமாக பல காரணங்களுக்காக இந்த வீதி விஸ்த்தரிப்பு என்பது லட்சக்கணக்கான மக்களுக்கு மிக அவசியமானதாக கருதப்பட்டு ரொறன்ரோ நகரசபை. மார்க்கம் நகர சபை மற்றும் யோர்க் பிராந்திய நிர்வாக ஆகியவற்றுக்கு இடையில் கலந்துரையாடப்பெற்ற ஒன்றாக இருந்த இந்த விஸ்தரிப்பு திட்டம் தற்போது நிதர்சனமாகியுள்ளது என் முன்னாள் மார்க்கம் நகர சபையின் 7ம் வட்டார உறுப்பினரும் தற்போதை ஒனறாரியோ மாகாணத்தின் மார்க்கம்- தோர்ன்ஹில் தொகுதி உறுப்பினருமான லோகன் கணபதி அவர்கள் மகிழ்ச்சியுடன் இந்த செய்தியை அனைவரோடு பகிர்ந்து கொண்டுள்ளார். இவர் இந்த வீதி விஸதரிப்பானது ரெப்ஸ்கொட் வீதிச் சந்தியிலிருந்து நைன்த் லைன் வீதி வரையிலுமான ஒன்றரை கிலோமீற்றம் தூரமுள்ள ஒரு பகுதியை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று லோகன் கணபதி அவர்களும் ஒன்றாரியோ அமைச்சர் றேமன்ட் சோ அவர்களும் சில மாதங்களாக ஒன்றாரியோஅரசாங்கத்தின் பல பிரிவுகளோடு நடத்திய கலந்துரையாடல் தற்போது நல்ல ஒரு செய்தியைத் தந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதுபற்றி லோகன் கணபதி அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் ஸ்கார்பரோ வாழ் மக்களுக்கு இது குறுகிய பயண நேரம், குறைந்த போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பான மற்றும் சீரான வீதிகள் ஆகியவற்றைக் குறிப்பதோடு, குடும்பங்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் உள்ளூர் வணிகர்களுக்கு சிறந்த போக்குவரத்து இணைப்புகளை வழங்கும். இந்த ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் வீதி விரிவாக்கமானது, ஸ்கார்பரோவை அதன் அண்டை சமூகங்களுடன் இணைக்கும் ஒரு பரபரப்பான வழித்தடத்தில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்த உதவப்போகிறது. இதன் மூலம் அன்றாடப் பயணமானது வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் பல வசதிகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீதி விஸ்தரிப்பு திட்டம் தொடர்பாக லோகன் கணபதி அவர்கள் தொடர்ந்து தெரிவிக்கையில் , “டாப்ஸ்காட் வீதி மற்றும் நைன்த் லைன் இடையேயான ஸ்டீல்ஸ் அவென்யூ கிழக்கு வீதியை விரிவுபடுத்துவதற்கானமொத்தச் செலவில் 90 சதவீதத்தை க னடிய மத்திய அரசாங்கமும் ஒன்றாரியோ அரசாங்கமும் பகிர்ந்து கொள்கின்றன என்பதை தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன்,” . அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்கார்பரோ பகுதி மக்கள் பல ஆண்டுகளாக இந்த விஸ்தரிப்பு திட்டம் தொடர்பாக அனைத்து அரசியல் தலைவர்களிடத்திலும் வற்புறுத்தி வந்துள்ளனர், இப்போது நாங்கள் அதைச் செய்து முடிக்கிறோம். இதன் மூலம் பயண நேரம் குறையும், போக்குவரத்து நெரிசல் நீங்கும் மற்றும் எமது வாக்காளர்களின் வாழ்க்கை முறையிலும் நாளாந்த நடவடிக்கையிலும்பல மாற்றங்கள் ஏற்படும் என்றார்