1 கோடி பார்வைகளை கடந்த “கர” படத்தின் “வாயா ஏய் கரசாமி’ பாடல்
Share
நடிகர் தனுஷ் நடிக்கும் 54-வது படத்தை ‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். இந்த படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் முதல்காட்சி பதாகை மற்றும் தலைப்பு காணொளியை படக்குழு வெளியிட்டது. அதன்படி இந்த படத்துக்கு ‘கர’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தலைப்பு காணொளியில் தனுஷ் பேசும், வசனங்கள் ரசிகர்களை கவர்ந்தன. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ், ‘கர’ திரைப்படம் வரும் ஏப்ரல் 30ம் வெளியாகும் என்று அறிவித்தார். 90-களில் நடக்கும் வங்கிக்கொள்ளை கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனுஷ் நடிக்கும் “கர” படத்தின் “வாயா ஏய் கரசாமி’ பாடல் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடலை அருண்ராஜா காமராஜ் வரிகளில் அருண்ராஜா காமராஜ், அந்தோணி தாசன், சத்யன், வி எம் மகாலிங்கம் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். கையில் துப்பாக்கியுடன் தனுஷ் அமர்ந்திருக்கும் இப்படம் முழுமையான ஆக்சன் பாணி படமாக இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.















