(07-10-2021) வவுனியா குருமன்காடு சந்திக்கு அருகாமையில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென எதிர் பக்கம் திரும்ப முற்பட்ட ...
(07-10-2021) யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று (புதன்கிழமை) டாட்டா ரக வாகனம் வீட்டின் மதிலில் மோதியதில் ஒருவர் காயமடைந்ததாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர். அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சிறிய டாட்டா ரக வாகனம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் விபத்து ...
– சாணக்கியன் சபையில் வலியுறுத்தல் (07-10-2021) அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து ...