இங்கிலாந்து, கனடா நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் காலிஸ்தான் அமைப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்த சீக்கியர் ஒருவருக்கு சொந்தமான கார்கள் சேதப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்தில் உணவகம் நடத்தி வருபவர் ஹர்மன் ...
விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாராயணசாமி என்ற நபர் முன்விரோதம் காரணமாக பரணிதரன் என்ற நபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பரணிதரன் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி. நிர்வாகம் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி வளையமாதேவி பகுதியில் நிலங்களை சமன் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது அங்குள்ள கிராம மக்கள், நிலங்களை கையகப்படுத்தியதற்கு இன்னும் முழுமையான இழப்பீடு வந்து சேரவில்லை என்று கூறி, பணிகளை ...