LOADING

Type to search

இலங்கை அரசியல்

சுதுமலையில் இடம்பெற்ற கோர விபத்து – பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழப்பு

Share

யாழ்ப்பாணம் சுதுமலைமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் , பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தாவடி வீதியில் அமைந்துள்ள சுதுமலைப் பகுதியிலே நவம்பர் 30ம் திகதி அன்றைய தினம் (30) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

30 அன்று இரவு 7.30 மணியளவில் குறித்த நபர் மானிப்பாயில் இருந்து மோட்டார் வண்டியில் வரும் போது எதிரே வந்த கார் மோதியதாலேயே இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்துள்ள போதிலும் 30 நிமிடங்களின் பின்னரே நோயாளர் காவுகை வண்டி குறித்த இடத்திற்கு வருகை தந்த நிலையில் குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

நோயாளரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தால் அந்த நபரை காப்பாற்றியிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .