LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்திப்பவனி

Share

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக புதன்கிழமை 14ம்திகதி காலை ஊர்திப்பவனியொன்று ஆரம்பமாகியது.

குறித்த ஊர்திப்பவனியானது 15ம்திகதி அன்று கிளிநொச்சியை சென்றடைந்தது. இதன்போது பரந்தன், கிளிநொச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்திப்பவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊர்திபவனி வடக்கை சேர்ந்த ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.

“தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் இறுதி போரின் சாட்சியங்கள் என்பன வாகனத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.