LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனின் மனிதநேயம் மிக்க செயலால் குவியும் பாராட்டுகள்!

Share

பு.கஜிந்தன்

அண்மையில் விபத்தில் அகால மரணமடைந்த யாழ். இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றிய பிரபாவின் மனைவியின் தாலி சிறு தொகைப் பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை விபத்து நடந்த இடத்தில் கண்டெடுத்த மிரோசிகன் என்ற இளைஞன் இந்திய தூதரகத்தில் குறித்த பொருட்களை ஒப்படைத்தார்.

எவ்வித எதிர்பார்பும் இன்றி, விபத்துள்ளானவர்கள் யாழ். இந்திய தூதரகத்தில் கடமையாற்றுபவர் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து தாம் கண்டெடுத்த பொருட்களை உரிய இடத்தில் ஒப்படைத்துள்ளார்.

இவ்வாறு படத்தில் காணப்படும் மனிதநேயம் மிக்க செயலை புரிந்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.