LOADING

Type to search

இலங்கை அரசியல்

வவுனியாவில் அறுக்கப்பட்ட தனது மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர்

Share

– உடலத்தினை தேடும் பொலிஸார்

(3/06/2025)

வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார்.

3ம் திகதி செவ்வாய்க்கிழமைன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு சென்ற கணவன் மனைவியை கொலைசெய்து நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கணவன்- மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளதாகவும் . இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். கொலையாளியான கணவர்.

நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் கழுத்தை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து மோட்டார் சைக்கிள் டிக்கிக்குள் வைத்து புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து பொலிசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செய்தியினால் தமிழர் பிரதேசம் அதிர்ச்சியினால் தவிப்பதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.