LOADING

Type to search

கனடா அரசியல்

ஸ்காபுறோவில் கனடா ஈழநாடு பத்திரிகையின் ஆண்டு விழாவில் சேகரிக்கப்பட்ட நிதி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பெற்றன

Share

இம்மாதம் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோவில் நடைபெற்ற ஈழநாடு பத்திரிகையின் 32வது ஆண்டு விழாவில் சேகரிக்கப்பட்ட நிதி கனடா ஈழநாடு பத்திரிகை வாசகர்கள் சார்பில் இலங்கைப் பணப் பெறுமதி 25 லட்சம் ருபா (11,415.55 கனடிய டொலர்கள்) வேர்களைத் தேடுங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற ஈழத்தில் இருந்து வருகை தந்த தமிழினத்தின் செஞ்சொற்செல்வர் – அறப்பணியாளர் திரு சிவபுமி அறக்கட்களையின் தாபகர் ஆறு.திருமுருகன் அவர்களிடம் கையளிக்கப்பெற்றது ஆறு.திருமுருகன் அவர்களினால் முள்ளிவாய்க்காலில் உருவாக்கப்படவுள்ள ‘மனநலம் குன்றியோர் – பாதிக்கப்பட்டோர்’ இல்லத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் அன்றைய விழாவில் சேகரிக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதியில் கனடா ஈழநாடு பத்திரிகை வாசகர்கள் சார்பில் 10,000.00 டொலர்கள் கனடாவில் உருவாகும் தமிழ்சமூக மையத்திற்கு வழங்கப்பெற்றது. இந்த தொகை மேற்படி அரங்கத்தில் திட்டத்தின் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் அன்றைய தினம். ஈழநாடு பத்திரிகையின் 32வது ஆண்டு விழாவில் கனடாவில் வர்த்தகத்துறையில் ஈடுபட்டு வெற்றிகளை ஈட்டியது மாத்திரமன்றி சமூகத்தின் நலனுக்காகவும் பங்களிப்புக்களை தொடர்ச்சியாக வழங்கிவரும் 5 வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றது.

அவரம்களில் திரு சங்கர் நல்லதம்பி- தமிழ்ச் சமூகத்தில் நன்கு பரீட்சயமானவர் அத்துடன் . ஹோட்டல் உரிமையாளர். அவரது Vibrant Hospitality Group என்ற நிறுவனத்தின் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கிவருகின்றார்.

அடுத்தவர். அரசியல் மற்றும் சமூகத் துறையில் பங்களிப்புக்களை வழங்கிவரும் ஸ்ரீ என்று அறியப்பெறுகின்றதிரு. ஸ்ரீகந்தராஜன் வல்லிபுரநாதர் அவர்கள் அடுத்தவர். வீடு விற்பனைத்துறையில் சாதனை படைத்த திரு ராஜ்.நடராஜா அவர்கள்
அடுத்தவர் வர்த்தகத்துறையிலும் சமூக சேவையிலும் நன்கு அறிமுகமான திரு கிருஷ்ணகோபால் செல்லத்துரை அவர்கள்.

இறுதியாக திரு அகிலன் மயில்வாகனம் அவர்களும் கெளரவிக்கப்பெற்றார். இவர் வங்கிச் சேவையிலும் சமூகப் பங்களிப்பிலும் சிறந்து விளங்குபவர்.

இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும். படங்களில் பத்திரிகையின் ஆசிரியர் திரு பரமேஸ்வரன் மற்றும் ஆறு.திருமுருகன் அவர்கள் ஆகியோர் காணப்படுகின்றனர்.