LOADING

Type to search

உலக அரசியல்

12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை – டிரம்ப் அதிரடி

Share

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு அதிரடியாக வர்த்தக வரியை உயர்த்தினார். மேலும், அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகிறார். அதேவேளை, சட்டவிரோத குடியேறிகளை கண்டறியும் பணியின்போது வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அதிபர் டொனால்டு டிரம்ப் தடை விதித்துள்ளார். தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ, எக்குவடோரிய கினி, எரித்திரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புருண்டி, கியூபா, லாவோஸ், சியேரா லியோனிக், டோகோ, துருக்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.