LOADING

Type to search

இந்திய அரசியல்

டில்லி முதல்-அமைச்சர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து பரபரப்பு தகவல்கள்

Share

மக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொண்ட டில்லி முதல்வர் ரேகா குப்தாவின் தலை முடியைப் பிடித்து இழுத்து,கன்னத்தில் அறைந்த நபரை காவல்துறை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

டில்லி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும் நிகழ்வு முதல்வர் இல்லத்தில் நடந்தது. அப்போது வந்த ஒரு நபர் திடீரென முதல்வர் மீது தாக்குதல் நடத்தினார். தலை முடியைப் பிடித்து இழுத்து,கன்னத்தில் அறைந்த அந்த நபரை காவல்துறை கைது செய்தனர். கூட்டத்தில் முதல்வரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என டில்லி காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. முதல்வர் தாக்கப்பட்ட சம்பவம் டில்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தில் இருந்த அஞ்சலி என்ற பெண் கூறியதாவது: மக்கள் குறைதீர் முகாமில் பங்கேற்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஒரு ஏமாற்றுகாரர் முதல்வர் ரேகா குப்தா கன்னத்தில் அறைந்தார். இது ஒரு பெரிய விஷயம். நான் அங்கே இருந்தேன். அந்த நபர் முதல்வரிடம் பேசிக்கொண்டிருந்த போது திடீரென தாக்கினார். பின்னர் அந்த நபரை காவல்துறை கைது செய்து அழைத்து சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.