LOADING

Type to search

சினிமா

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் கதாநாயகனாக அறிமுகம்

Share

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியானது. இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருமாறியது. இதனை தொடர்ந்து அபிஷன் அடுத்ததாக கதாநாயகன் அவதாரத்தை எடுத்துள்ளார். சியான் பிலிம்ஸ் & எம்ஆர்பி எண்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அபிஷன் ஜீவிந்துக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தை மதன் இயக்குகிறார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படபூஜை விழா நடைப்பெற்றது.