LOADING

Type to search

இந்திய அரசியல்

விஜய்யால் வெற்றியின் பக்கம் வரமுடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

Share

தமிழகத்தில் ஆன்மீகம் தான் வளர்ந்து ஒங்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    சென்னையை அடுத்த முவரசம்பட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழா மக்களை இணைக்கும் விழாவாக உள்ளது. இந்த விழாக்களை மதம் சார்ந்தது என்பார்கள். தமிழகத்தில் ஆன்மீகம் தான் வளர்ந்து ஒங்கும். விநாயகர் சதுர்த்திக்கு வேறு மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் வாழ்த்து சொல்கின்றனர். ஆனால் நம் முதல்-அமைச்சர் மட்டும் வாழ்த்து சொல்லாதது தவறு; மன்னிக்க முடியாத குற்றம். மக்களுக்கான ஒரு நம்பிக்கை இருக்கும்போது அதை முதல்-அமைச்சர் மதிக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வாங்கிய மனுக்கள் எல்லாம் வைகை ஆற்றில் மிதக்கின்றது. தவளையுடன் ஸ்டாலின், மீன்களுடன் ஸ்டாலின் என்று ஆரம்பித்து உள்ளாரோ என தெரியவில்லை. பெயர் அளவிற்கு திட்டங்களை செய்து விட்டு மக்களை பற்றி கவலைப்படவில்லை. தீர்வு காணப்பட்ட மனுக்களை ஆற்றில் வீச முடியுமா?. அப்போ தீர்வு காணாமல் நிறைய மனுக்கள் உள்ளதா?. மக்களை பற்றி கவலைப்படவில்லை. நாம் விநாயகரை ஆற்றில் கரைப்போம். ஆனால் அவர்கள் மனுக்களை கரைக்கின்றனர். விஜய் அரசியலுக்கு வந்து உள்ளார். அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால் போட்டி என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே தான். அடுத்த இடத்திற்கு சீமானும் விஜய்யும் போட்டி போட்டு கொள்ளலாம். விஜய் மாற்று சிந்தனையை சொல்வார் என்று எதிர்ப்பார்த்தோம். ஆனால் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்.விஜய்காந்த் சேர்த்து இருக்கிறார். இவர்கள் சிந்தனையில் கட்சி நடத்துகிறார்கள். புதிய சிந்தனையில் இல்லாமல் புதிய கட்சி எதற்கு என்று தெரியவில்லை. பவுன்சர் தூக்கி போட்டது யார் என்று விவாதம் நடக்கிறது. பவுன்சர் கலாச்சாரமே தவறு. விஜய்யால் வெற்றியின் பக்கம் வர முடியாது. ஒவ்வொரு மாநாட்டில் நிரூபித்து கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் எதிர் கூட்டணி பலமாகி வருகிறது. அதிமுக- பாஜக கூட்டணிதான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.