துணை அதிபர் தேர்தல் – வாக்களித்தார் ராகுல் காந்தி
Share
நாட்டின் 16-வது துணை அதிபராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ந்தேதி நிறைவு பெற்றதில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர்.தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தின் எப்-101 அரங்கில் தொடங்கியது மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. காலை வாக்குப் பதிவு தொடங்கியவுடன் முதல் ஆளாக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கைப் பதிவு செய்தார். தொடர்ந்து, மத்திய அமைச்சர்களும் எம்.பி.க்களும் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தங்களின் வாக்கைப் பதிவு செய்தனர்.




















