கனடாவில் கோலாகலமாக ஆரம்பமாகிய மூன்று நாள் `அனைத்துலக திருக்குறள் மாநாடு`
Share
தாயகத்தின் சமூக மற்றும் சமயச் செயற்பாட்டாளரும் மனித நேயப் பணியாளருமான ஆறு . திருமுருகன் அவர்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற பேச்சாளர் பேராசிரியை பர்வின் சுல்தானா அவர்கள் ஆகியோரின் வருகையும் உரைகளும் கலந்து கொண்டவர்களின் மனங்களை குளிர்மைப்படுத்தின.
6 ஆவது உலகத் திருக்குறள் மாநாடு 2025, கனடா செப்டம்பர் 19, 20, 21 ஆகிய 3 நாட்கள்
தொடக்க விழா செப்டம்பர் 19ம் 2025 வெள்ளிக்கிழமை
Highland Hall, University of Toronto, Scarborough

19-09-2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு திருவள்ளுவரின் உருவப்படத்தைத் தமது கைகளில் ஏந்திய வண்ணம் திருக்குறள் மாநாட்டுக் குழுவினர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்துள்ள பேச்சாளர்கள் மற்றும் அறிஞர்கள் மற்றும் கனடா வாழ் கலை இலக்கியப் பிரமுகர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் விழா மேடை நோக்கி அணிவகுத்து நடந்து வந்தனர்.
மங்கள இசையை டாக்டர் நரேந்திரன் பஞ்சாபிகேசன், செல்வன் நிரூப்ன நாகேந்திரன், செல்வன் சூரியகுமார் ஜெயராமன், செல்வன் நிர்மலன் நாகேந்திரன் வாசித்தனர்.
காலை 9.30 முதல் 10.00 மங்கள விளக்கேற்றல் நிகழ்ந்தது.
தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுக்கு நன்றி செல்வி கிரேஸ்னி நாதன் அவர்கள் பாடினார். அகவணக்கம் நிகழவும் நடைபெற்றது.
மாநாட்டு அறிமுகத்தை திரு. சிவன் இளங்கோ அவர்கள் நிகழ்த்தினார்கள்.
வரவேற்புரையை மருத்துவர் இராமநாதன் இல்ம்போதரன் அவர்களும், ஆசியவியல் நிறுவனத்தின் செய்தியை முனைவர் ஜி. ஜான் சாமுவேல் நிகழ்த்தினார்கள். வாழ்த்துரைகளை பேரா. லிண்டா ஜான்சன், முதல்வர் ரொரொன்றோ பல்கலைக்கழகம், ஸ்கார்பரோ பேரா. சித்தார்த்தன் மெளனகுரு, தமிழ் இருக்கை ரொரொன்றோ பல்கலைக்கழகம். முனைவர் வடிவேலு சாந்தகுமார் ஈகை அறக்கட்டளை
திரு. சுப்பிரமணியம் இராசரத்தினம், கனடா
முனைவர் செல்வநாயகி சிறிதாஸ், கனடா]
பேரா. இளையதம்பி பாலசுந்தரம், கனடா
முனைவர் பிரெண்டா பெக், கனடா
திரு. இராஜன் பிலிப்ஸ், கனடா
திரு. டென்னிசன் ஜெயசூர்யா, மலேசியா
திரு. கந்தையா இராஜமனோகரன், இங்கிலாந்து
மருத்துவர் விஜய் ஜானகிராமன், அமெரிக்கா
பேரா. பர்வீன் சுல்தானா, இந்தியா
டாக்டர் ஆறு. திருமுருகன், இலங்கை
முனைவர் இராசேந்திரன் கவுண்டர், தென்னாபிரிக்கா
திரு. குமார் புனிதவேல், கனடா ஆகியோர் வழங்கினார்.
ஆய்வரங்க அறிமுகம், முனைவர் இல. சுந்தரம், திருமதி கண்மணி அலோஷியஸ் ஆகியோர் செய்தனர். மாநாட்டு மலரை திரு. சிவபாலு மாஸ்டரும், முனைவர் உதயன் துரைராசா அவர்களும், திரு. வின் மகாலிங்கம் அவர்களும் வெளியிட்டு வைத்தனர்.
நிகழ்ச்சிகளை திரு. ரமணன் சந்திரசேகரமூர்த்தி தொகுத்து வழங்கினார்.
முதன்மை அமர்வு ஒன்றில், முதலில் அருட்தந்தை பேரா. ஜோசப் சந்திரகாந்தன் அவர்கலும், பேரா. சேரன் அவர்களும், பேரா. பாலசுந்தரம் இளையதம்பி அவர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
உணவு இடைவேளையின் பின்னர் முதன்மை அவர்வு இரண்டில், திரு. தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா, பேரா. டேனியல் ஜெயராஜ், முனைவர் பிரெண்டா பெக், முனைவர் டென்னிசன் ஜெயசூர்யா ஆகியோரும் உரை நிகழ்த்தினார்கள்.
Breathe A Little Better என்னும் முனைவர் சுந்தர் பாலசுப்ரமணியன் அவர்களின் நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
இணை அமர்வுகளும் நிகழ்ந்தன.
தனிநாயக அடிகள் அரங்கில்:
அரசியல்(தமிழ்) பற்றிய ஆய்வு, முனைவர் உதயன் துரைராசா தலைமையில் நிகழ்ந்தேறியது. இதில், திரு. க சண்முகலிங்கம், வள்ளுவர் அரசுக் கோட்பாடு: பொருட்பாலின் ஐந்து அதிகாரங்கள் கொண்ட ஆய்வு,
திரு. சிவபாலு தங்கராசா, வள்ளுவர் காட்டும் அரசியல் கோட்பாடுகளும் கனடா அரசியல் அமைப்பும்.
திரு, சுகந்தன் வல்லிபுரம், திருக்குறள் கூறும் ஒற்றாடல் – தொல்காப்பியர் காலம் முதல் இன்றுவரை
திருமதி சசிகலா ஜீவாந்தன், திருவள்ளுவரின் பார்வையில் நாடு
பேராசிரியர் மா. சின்னத்தம்பி, திருக்குறளில் கல்வி, சுயமேலாண்மையின் பங்களிப்புப் பற்றிய பார்வை. எனும் தலைப்புகளில் உரைகள் நிகழ்ந்தன
க.பொ, இரத்தினம் அரங்கில்
ஒப்பாய்வு மதம் எனும் தலைப்பில், முனைவர் செய்வநாயகி சிறிதாஸ் தலைமையில்,
திரு அரியராஜா முத்தையா, திருக்குறளும் தம்மபதமும்
திரு. கனி விமலநாதன், திருக்குறளும் ஆசீவகமும்
திருமதி, கலாதேவி அரியராஜா, திருக்குறளும் ஆசிவகமும்
முனைவர் புட்பா கிறிட்டி, திருக்குறளும் விவிலியமும்
திரு. கஜரூபன் குகதாசன், திருக்குறளும் பெளத்தமும்
எனும் தலைப்புகளில் உரைகள் வழங்கினர்.
ஆறுமுகநாவலர் அரங்கில், ஒப்பாய்வு (இலக்கியம்) முனைவர். இ. பாலசுந்தரம் தலைமையில் நிகழ்ந்தது. கலாநிதி மைதிலி தயாநிதி, ஜி.யு. போப்பினதும், வி. ஆர். இராமசந்திர தீட்சிதரினதும் குறள் மொழிபெயர்ப்புகள் பொருட்பாலை மையப்படுத்திய ஓர் ஒப்பீடு திரு. அகணி சுரேஸ் திருக்குறளிலும் பதினெண்கீழ் கணக்கு நூல்களிலும் நட்பு பற்றிய கருத்துக்களும், உளவியல் சிந்தனைகளம் திரு. இராச்குமார் குணரட்ணம் போரும் மதிநுட்பமும் – திருவள்ளுவரின் போர் ஒழுக்கமும், சீன அறிஞரான சன் சூவின் போர்க்கலையும் திருமதி லாவண்யா தினேஷ்குமார் திருக்குறளும் ஏனைய தமிழ் நீதி நூல்களும் மருத்துவர் வரதா கந்தசாமி பொருளியல் சிந்தனையில் வள்ளுவரும் ஆடம் சிமித்தும்: ஒப்பாய்வு எனும் தலைப்புக்களில் உரை நிகழ்த்தினர்.
கலை நிகழ்ச்சிகள் மாலை 6.30 மணி முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடனம் “குறளின் அசைவு” திருமதி நிரோதினி பரராஜ சிங்கம் மாணவிகள்
சிறப்புப் பேச்சு: பேரா. பர்வீன் சுல்தானா, இயக்குனர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
இவரது உரை வழமைபோல பார்வையாளர்களை வசப்படுத்திய ஒரு உற்சாகமான உரையாக அமைந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சி குறளின் குரல் – இசையமைப்பாளர் பரத்வாஜ் அவரகளின் ஏற்பாட்டில் கனடா மெகா ரியுனர்ஸ் இசைக்குழு அதன் தலைவர் அரவிந்தன் மகேசன் அவர்களது குழுவினர் இசையில் நடைபெற்றது. தொடர்ந்து கௌரவிப்பு இடம்பெற்றது. இவ்வாறான அனைத்துலக திருக்குறள் மாநாட்டு முதல்நலாள் நிகழ்ச்சிகள் இனிய நிறைவுற்றன.
நிகழ்ச்சிகளை திருமதி ஜோதி ஜெயக்குமார் தொகுத்து வழங்கினார்.
இரவு 9.00 மணிக்கு முதலாம் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவு பெற்றன

































