தமிழ்நாடு திருச்சியிலிருந்து வெளிவரும் `இனிய நந்தவனம்` டென்மார்க் சிறப்பிதழ் வெளியீட்டு விழா மூளாய் மறுமலர்ச்சி மையத்தில் நடைபெற்றது.
Share
தமிழ்நாடு திருச்சியிலிருந்து வெளிவரும் மாத இதழான `இனிய நந்தவனம்` டென்மார்க் சிறப்பிதழ் வெளியீட்டு விழா 20ம் திகதி சனிக்கிழமையன்று மூளாய் மறுமலர்ச்சி மையத்தில் நடைபெற்றது. மென்மார்க் தேசத்தில் வாழும் மூளாயை பிறப்பிடமாகக் கொண்ட நடன ஆசிரியையும் சமூக சேவகியுமான ஆர் சசிதேவி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.நேற்றையதினம் (20) பி.ப 4.00 மணியளவில் எழுக மூளாய் மறுமலர்ச்சி மையத்தில் நடைபெற்றது.
மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு இறை வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை, வாழ்த்துரை, விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. முதற்பிரதியை மூளாய் கிராம சேவகர் சிவரூபன் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து சிறப்பு பிரதிநிதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
சி.சிவமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். இந்திய துணை தூதரக கலாச்சாரம், அபிவிருத்தி மேலதிக அதிகாரி ஸ்ரீ.சங்கரன் ராஜகோபால் கலந்து சிறப்பித்துடன், சைவ மதகுருக்கள், பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர் சிவரூபன், எழுக மூளாய் மறுமலர்ச்சி மையத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.




















