LOADING

Type to search

இலங்கை அரசியல்

வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா 2025 சற்றுமுன் கொடியேற்றதுடன் ஆரம்பம்!

Share

பு.கஜிந்தன்

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா 2025 ஆனது ஞாயிற்றுக்கிழமை 21ம் திகதி அன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவானது சற்றுமுன் விசேட பூசைகள் இடம்பெற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலமையிலான குருமார் திருவிழா கிரியைகளை மேற்கொண்டதுடன் சுப வேளையில் கொடியேற்றும் இடம்பெற்று சிறப்பு பூசைகள் தற்போது இடம் பெற்றுவருகின்றன.

திருவிழாவிற்கான சுகாதார வசதிகளையும் ஏனைய பணிகளையும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் பருத்தித்துறை பிரதேச சபையும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் வழங்குகின்றது. பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.