LOADING

Type to search

இந்திய அரசியல்

அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது – எடப்பாடி பழனிசாமி

Share

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

       தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ளது.

அதேவேளை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குன்னூர் பேருந்து நிலையம் அருகே திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, ஏழை மக்களை பற்றி கவலைப்படாத ஒரே முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். நிர்வாக திறமையற்ற முத-அமைச்சராக இருக்கிறார். 2026ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழகம் போதை இல்லாத தமிழகமாக மாற்றப்படும். திமுக ஆட்சியில் உள்ள இல்லாத துறையே இல்லை. எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் டாஸ்மாக் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி தண்டனை பெற்று தருவோம். அதிமுகவை உடைக்க, பிளக்க எத்தனையோ சதி செய்து பார்த்தார்கள். ஆனால் அதை அதிமுக தொண்டர்கள் முறியடித்தனர். அதிமுக உழைப்பால் உயர்ந்த கட்சி. தொண்டர்களால் உருவான கட்சி. அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. அத்தனை தொண்டர்களும் அதிமுகவை தாங்கி பிடித்துக்கொண்டுள்ளனர். அதிமுகவுக்கு எவ்வளவோ சோதனையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவை அத்தனையும் அதிமுக தொண்டர்களால் தூள்தூளாக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.