LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைனில் பயணிகள் ரெயில் மீது ரஷியா தாக்குதல்

Share

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 317வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனால் இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைனில் பயணிகள் ரெயில் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சுமி மாகாணத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில் மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.