பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
Share
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் பாடலான நல்லாரு போ மற்றும் 3 ஆம் பாடலான சிங்காரி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், ‘டியூட்’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.




















