எஸ்ஐஆர் என்ற பெயரில் வாக்குரிமை பறிப்பை நடக்க விடமாட்டோம் – மு.க.ஸ்டாலின்
Share
தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நெல் கொள்முதல் ஈரபதத்தை 22 சதவீதமாக உயர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன். பேரிடர் மீட்பு பணிக்காக மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. மத்திய பா.ஜ.க. அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. எஸ்ஐஆர் என்ற பெயரில் நமது வாக்குரிமையை பறிக்க முயல்கிறார்கள். வாக்குரிமை பறிப்பை எந்த நிலையிலும் நடக்க விடமாட்டோம். ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமை தான், அதனை எந்நாளும் விட்டுத்தரமாட்டோம் என்றார்.




















