LOADING

Type to search

சினிமா

“அஞ்சான்” படத்தின் புதிய முன்னோட்டம் மறு வெளியீடு

Share

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2014- ம் ஆண்டு வெளியான படம் ‘அஞ்சான்’. இத்திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார். இந்த படத்தினை ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கமர்ஷியல் படமாக வெளிவந்த அஞ்சான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆன நிலையில் படத்தை மறு வெளியீடு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘அஞ்சான்’ படத்தை ரீ-எடிட் செய்து வருகிற 28ந் தேதி மறு வெளியீடு செய்ய உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ரீ எடிட் செய்யப்பட்ட அஞ்சான் படத்தின் புதிய முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.