LOADING

Type to search

உலக அரசியல்

இங்கிலாந்தில் நீதிமன்ற உத்தரவை மீறிய காவலருக்கு ரூ.58 லட்சம் அபராதம்

Share

இங்கிலாந்தில் கடந்த 2021-ம் ஆண்டு நாடின் பஸ்ஸார்ட்-குவாஷி என்ற பெண்ணை சந்தேகத்தின்பேரில் காவல்துறை கைது செய்தனர். பின்னர் அடுத்த நாளே அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் கைது செய்தபோது காவல்துறை தன்னை தாக்கியதாக நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளியை சமர்ப்பிக்க நார்தாம்ப்டன்ஷயர் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 4 ஆண்டுகள் ஆகியும் காவல்துறை அந்த காணொளியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை அவமதித்த நார்தாம்ப்டன்ஷயர் காவலருக்கு சுமார் ரூ.58 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு நார்தாம்ப்டன்ஷயர் காவல் நிலைய தலைமை காவலர் இவான் பால்ஹாட்செட் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறி உள்ளது.