LOADING

Type to search

இலங்கை அரசியல்

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற குருதிக் கொடையும் மரக்கன்று வழங்கலும்!

Share

மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு ஒன்று 26ம் திகதி அன்றையதினம் நாகர்கோவில் குரு குலம் சன சமூக நிலையத்தில் இடம்பெற்றது.

ஜனநாயக போராளிகள் கட்சியின் நிதிப் பங்களிப்பில், வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

இவ் குருதி நன்கொடை நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களுக்கு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின் குருதித்தான நிகழ்வு இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி, ஜனநாயக போராளிகள் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வன், ஜனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் குருதி நன்கொடை நிகழ்வில் பங்குகொண்ட குருதிக் கொடையாளர்களுக்கஉ மரக்கன்நுகளும் வழங்கி வைக்கப்பட்டன.