LOADING

Type to search

இந்திய அரசியல் இலங்கை அரசியல்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவைக்குமிடையே சென்னையில் சந்திப்பு!

Share

பு.கஜிந்தன்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு 19ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. அன்று இச்சந்திப்பு 19-12-2025 காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது. சுமார் 2.00 மணிநேரம் நேரம் இடம்பெற்றது.

இதன்போது தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம்.

ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.

முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது.