LOADING

Type to search

இலங்கை அரசியல்

2010இற்குப் பிறகு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அடையாளம் காணாத 62 உடல்கள் தகனம்.

Share

ந.லோகதயாளன்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையில. அடையாளம் காணப்படாத 62 உடல்கள் தகனம செய்யப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்து உறவுகள் மற்றும் ஏனையோரால் அடையாளம் காணப்படாது வைத்தியசாலை நிர்வாகத்தினாலேயே தகனம. செய்யப்பட்ட உடல்களின் எண்ணிக்கை தொடர்பில் ஆண்டு ரீதியாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே வைத்தியசாலை நிர்வாகத்தினால் மேற்படி எண்ணிக்கை வழங கப்பட்டுள்ளது.

இதற்கமைய 24 உடல்கள் பண்ணை பொது மயானத்திலும் எஞ்சிய 38 உடல்களும் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்னன.

இதேநேரம் இந்த 62 உடல்களில் 2010ஆம. ஆண்டு 13 உடல்களும், 2011 ஆம் ஆண்டு 07 உடல்களும், 2012 ஆம் ஆண்டு 02 உடல்களும், 2014 ஆம் ஆண்டு 10 உடல்களும், 2016ஆம் ஆண்டு ஓர் உடலும், 2017 ஆம் ஆண்டு 03 உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதோடு 2018 ஆம் ஆண்டு இரு உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.

2019இல் 04 உடல்களும், 2020 இல் 04 உடல்களும், 2021 இல் 3, 2022இல் இரண்டு, 2023இல் 04 உடல்களும், 2025 இல் 04 உடல்களுமாகவே 62 உடல்கள் அடையாளம் கண்டு உரிமை கோரப்படாது நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு வைத்தியசாலையால் தகனம் செய்யப்பட்டுள்ளன.