அமெரிக்காவிற்கான கனடாவின் புதிய தூதுவராக தனது நண்பரான ஒருவரை நியமனம் செய்துள்ள பிரதமர் மார்க் கார்னி
Share
அமெரிக்காவிற்கான கனடாவின் புதிய தூதுவராக தனது நண்பரான மார்க் வைஸ்மேன் என்பவரை நியமனம் செய்துள்ள பிரதமர் மார்க் கார்னி அவர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்றும் மார்க் வைஸ்மேன், கண்டத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மார்க் கார்னி அவர்கள் லிபரல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பெற்ற பின்னர் பல நண்பர்களை அவர்கள் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் என்பதைத் தெரிந்திருந்தும் பொதுத் தேர்தலில் போட்டியிட நிறுத்தினார் என்ற விமர்சனமும் அந்த நாட்களிலேயே எழத் தொடங்கியது.
அந்த வரிசையில் தற்போது அமெரிக்காவிற்கான கனடாவின் தூதுவராக நியமனம் செய்யப்பெற்றுள்ள வைஸ்மேன் பிரதமர் மார்க் கார்னியின் நீண்டகால நண்பர் என்றும் அவர் மார்க் கார்னியின் லிபரல் தலைமைத்துவ போட்டியில முதலில் பங்களித்தவர்களில் ஒருவர் என்றும், கடந்த பொதுத் தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிகபட்சமாக $1,750 மற்றும் லிபரல் கட்சிக்கு $1,750 நன்கொடையும் அளித்தார் என கனடிய தேசிய ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

இந்த மாதம் தனது பதவியை பூர்த்தி செய்யும் முன்னாள் தூதுவர் கிர்ஸ்டன் ஹில்மேனுக்குப் பதிலாக அவர் வாசிங்கடன் நகரில் தனது பதவியை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
, அடுத்த ஆண்டு கனடா-அமெரிக்கா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதில் ஒரு புதிய குழு கவனம் செலுத்த முடியும் என்றும் பிரதமர் மார்க் கார்னி கூறினார்.
வைஸ்மேன் அவர்கள் கனடா-அமெரிக்க உறவுகளுக்கான பிரதமரின் கவுன்சிலில் உறுப்பினராக உள்ளார், டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்கவிருந்த நிலையில், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு இதுவாகும்.
ட்ரூடோ அவர்கள் வைஸ்மேனை அந்த கவுன்சிலில் சேர்க்கவில்லை, ஆனால் மார்ச் மாதம் பிரதமராக பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு கார்னி அவரைச் சேர்த்தார்.
தற்போது 55 வயதான வைஸ்மேன், ஒன்ராறியோவின் நயாகரா பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் மற்றும் சட்டத்தில் கூட்டு முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்,
முதலில் நியூயார்க் நகரத்திலும் பின்னர் பாரிஸிலும். ஒன்ராறியோ ஆசிரியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் பங்கு நிதிகளையும் அவர் நிர்வகித்தார், என்றும் மேலும் கனடா ஓய்வூதியத் திட்டத்தின் முதலீட்டு நிதியை நிர்வகித்தார் என்றும் தெரிவிக்கப்பெறுகின்றது




















