LOADING

Type to search

சினிமா

‘கும்கி 2’ படம் ஜன.3ம் தேதி ஓ.டி.டி.யில் வெளியாகிறது

Share

கடந்த 2012-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கும்கி’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘கும்கி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘கும்கி 2’ படத்தை பிரபு சாலமன் இயக்கி இருந்தார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டு இருந்தது. ‘கும்கி 2’ படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த மாதம் 14-ந்தேதி வெளியான ‘கும்கி 2’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், ‘கும்கி 2’ படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘கும்கி 2’ படம் ஜனவரி 3-ந்தேதி பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.