LOADING

Type to search

இந்திய அரசியல்

மும்பையில் “ஓம்கார் ஸ்வரூப் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அம்ருத் கீதாயன்” இந்தி பாடல் தொகுப்பு மற்றும் “அம்ருத் மஞ்சரி” இந்தி புத்தக வெளியீடு

Share

மும்பை,ஆக.27- திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனுஜோதி ஆசிரமத்தை ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா நிறுவியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக மனுஜோதி ஆசிரமம் இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் ஏராளமான ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

“ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!”என்ற கொள்கையைப் பின்பற்றி, கடவுள் ஒருவரே என்றும், நாம் அனைவரும் அவருடைய சிருஷ்டிகளே என்றும் மனுஜோதி ஆசிரமம் போதித்து வருகிறது.

சாதி, மதம் போன்ற எந்த வேறுபாடுகளும் இல்லாமல் அனைத்து மனிதர்களும் தேசிய ஒருமைப்பாட்டுடன் நல்லிணக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு பகுதிகளில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமய நல்லிணக்க மாநாடுகளையும் மனுஜோதி ஆசிரமம் நடத்தி வருகிறது.

அதன் ஒருமுகமாக வேதங்களின் சாரத்தை பாடல் வடிவில் எடுத்துரைக்கும் “ஓம்கார் ஸ்வரூப் ஸ்ரீ லஹரி கிருஷ்ண அம்ருத் கீதாயன்” என்ற இந்தி ஆடியோ ஆல்பம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள பக்திப் பாடல்களை சங்கர் மகாதேவன், அனுப் ஜலோடா, சாதனா சர்கம், விஜய் பிரகாஷ், மதுஸ்ரீ மற்றும் பரத் கமல் உள்ளிட்ட பிரசித்தி போன்ற பாடகர்கள் பாடியுள்ளனர்.

இந்த ஆடியோ ஆல்பம் வெளியீட்டு விழா நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 23ஆம் தேதி மும்பை காட்கோபரில் உள்ள அன்னூர் பாங்குவெட் ஹாலில் சிறப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது. அச்சமயம் ஸ்ரீமந்நாராயணர் ஸ்ரீலஹரிகிருஷ்ணாவின் ஆன்மீக உபதேசங்களைக் கொண்ட “அம்ருத் மஞ்சரி” என்ற இந்தி புத்தகமும் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பண்டிட் பிரேம் பிரகாஷ் துபே சிறப்பு விருந்தினராக கொண்டார். மேலும் வெமுலா சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சங்கர் பிரசாத் வெமுலா, கன்சியூமர் ஃபோரம் நிறுவனரும் தலைவருமான ராஜேஷ் போஸ்லே மற்றும் மேயர்-இன்-கவுன்சில் நவ்நீத் ஏ. பிரஞ்ஜீவன் பாய் திரிவேதி, ஜோஷி ஹஸ்முக் பாய் ரதிலால், மற்றும் நாராயண் ஐயர் ஆகியோர் கலந்து கொண்டனர். தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த ஆல்பத்தின் இனிமையான பாடல்களுக்கு திரு. ஷைலேஷ் தானி இசையமைத்துள்ளார். இப்பாடல்களை எழுதிய கவிஞர் சுரேஷ் திவாரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் அமைந்துள்ள இந்த மனுஜோதி ஆசிரமம், ஆன்மீக ஞானத்தைப் பெறுவதற்கான பயிற்சி மையமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து வேதங்களையும் கற்றறிவதற்கான ஆராய்ச்சி மையமாக திகழ்கிறது.

சாதி, மதம், நிறம், மொழி என்ற எந்த வேறுபாடுமின்றி அனைவரையும் மனுஜோதி ஆசிரமம் அன்புடன் அழைக்கிறது. மேலும் இவ்விழா ஆகஸ்ட் 30ம் தேதி குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற உள்ளது.