LOADING

Type to search

இலங்கை அரசியல்

எங்குமே சபை மரியாதைக்கு மதிப்புக் கொடுக்காத அருச்சுனா எம்.பியுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்?

Share

காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அருச்சுனா எம்.பியுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை அன்றையதினம் காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா கலந்துகொண்டிருந்தார்.

கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தவேளை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் கருத்துக்களுக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இடையிடையே கைதட்டி ஆரவாரம் செய்த சம்பவம் இடம்பெற்றது.

கூட்டம் முடிவடைந்த பின்னர் சில உத்தியோகத்தர்கள் முண்டியடித்தவாறு அருச்சுனாவுடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்து சம்பவம் அங்கு கலந்து கொண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது.

அருச்சுனா தொடர்ச்சியாக சர்ச்சை மிகுந்த கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், கடமை நேரத்தில் அவருடன் செல்ஃபி எடுப்பதற்கு உத்தியோகத்தர்கள் முண்டியடித்த சம்பவம் வியப்பையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.