30 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துள்ள ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தை வாழ்த்திய ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் அரிஸ் பாபிகியன்!
Share
கனடாவில் 1995ம் ஆண்டு ஆரம்பிக்கப்பெற்று அமரர் கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களை முதலாவது தலைவராகக் கொண்டு இயக்கத் தொடங்கி தற்;பொழுது 30 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமான இயங்கிவருகின்ற ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கு’ ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றாரியோ அரசின் குடியுரிமை அமைச்சின் பாராளுமன்றச் செயலாளருமாகிய அரிஸ் பாபிகியன் அவர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கடந்த 9ம் திகதி வெள்ளிக்கிழமை தனது அலுவலகத்தில் அவரைச் சந்தித்த எழுத்தாளர் இணையத்தின் தற்போதையத் தலைவர் ரவி கனகசபை அவர்களோடு உரையாடியபோதே அவர் ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தொடர்ச்சியான பங்களிப்பையும் கனடாவில் உள்ள தமிழ் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் இணைத்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளோடு முன்னேற்றத்தை அடைந்துள்ள அதன் வளர்ச்சியையும் பாராட்டினார்.
மேற்படி சந்திப்பின்போது. ரவி கனகசபை அவர்களுடன் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான லோகன் லோகேந்திரலிங்கம் அவர்களும் உடனிருந்தார்.
செய்தியும் படமும்- டினேஷ்




















