LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ள 16வது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி !

Share

வட இலங்கையில் வணிகம், புத்தாக்கம், மற்றும் நிலைபேற்றியலை வலுப்படுத்துகின்ற 16 ஆவது சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழ். முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

வட இலங்கையின் மிகப் பெரிய மற்றும் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் பன்முக வர்த்தகக் கண்காட்சியான யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நிகழ்வானது. தொடர்ந்து 16 தடவையாகவும் இடம்பெற ஏற்பாடாமியுள்ளதுடன், 2026 ஜனவரி 23 முதல் 25 வரை யாழ் முற்றவெளி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இப்பிராந்தியத்தில் மிகவும் நிலைபெற்றுள்ள வர்த்தக மேடையாக மாறியுள்ள இக்கண்காட்சி வட மாகாணத்தின் மத்தியில் பொருளாதார மேம்பாட்டை முன்னேற்றி, வணிக தொடர்புகளை வளர்த்து. தொழில்நுட்பத்தால் முன்னெடுத்துச் செல்லப்படும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதில் தொடர்ந்தும் முக்கிய பங்கு வகிக்கும்.

இலங்கையில் கண்காட்சி மற்றும் வர்த்தக நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் முன்னிலை வகிக்கும் அதேசமயம், ஐனாதிபதி விருதையும் வென்றுள்ள Lanka Exhibition & Conference Services (LECS) ன் ஏற்பாட்டிலும், யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடனும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள JITE. நாட்டில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற நிகழ்வுகளில் ஒன்றாக வளர்ச்சி கண்டுள்ளது.

தொழில் நேர்த்தி மற்றும் பல தசாப்தங்கள் நீண்ட தொழில்துறை நிபுணத்துவம் ஆகியவற்றுக்காகப் பெயர்பெற்று விளங்கும் LECS, உச்ச மட்ட பங்கேற்பு, பரந்தளவில் தேசிய தெரிநிலை, மற்றும் யாழ் குடாநாடு எங்கிலும் சீரான வகையில் JITF குறித்த ஊக்குவிப்பு எட்டுவதை உறுதி செய்யும் அதன் வலுவான வலையமைப்பு மற்றும் நன்மதிப்பு ஆகியன மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற வட பிராந்திய சந்தையில் மூலோபாய நுழைவாயிலாக இக்கண்காட்சி திகழ்வதை அங்கீகரித்துள்ள வியாபாரங்கள், முதலீட்டாளர்கள், மற்றும் நிறுவனங்களை தொடர்ந்தும் இந்நிகழ்வு தன்பால் ஈர்த்து வருகின்றது.

வடக்கில் இடம்பெறும் மிகவும் விரிவான மற்றும் பெறுபேறுகளால் முன்னெடுக்கப்படுகின்ற வர்த்தகக் கண்காட்சியாக JITF மிகவும் வலுவாக நிலைபெற்றுள்ளது. இந்த ஸ்தானத்தை 2026 ஆண்டு நிகழ்வும் மீண்டும் வலுப்படுத்தவுள்ளது.

கடந்த ஆண்டு நிகழ்வில் இலங்கையின் அனைத்து பாகங்களிலுமிருந்து 78,452 பார்வையாளர்கள் பங்குபற்றியதுடன் சிரேஷ்ட அதிகாரிகள், வர்த்தகத் துறை தலைவர்கள், தொழில்முயற்சியாளர்கள், மற்றும் முதலீட்டாளர்கள் அடங்கலாக வணிகப் பிரதிநிதிகள் 5,000 பேரும் அழைக்கப்பட்டிருந்தனர். வர்த்தகப் பரிமாற்றம் மற்றும் சந்தை ஆய்வு ஆகியவற்றுக்கான முதன்மையான மேடை என்ற இக்கண்காட்சியின் அந்தஸ்தை மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையான வரவுகள் பிரதிபலிக்கின்றன.

பலவகைப்பட்ட கைத்தொழில் துறைகள் மத்தியில் விரிவான தயாரிப்புக்கள் சேவைகள், மற்றும் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட 400 கரும் மேற்பட்ட கண்காட்சிக்கூடங்களை இக்கண்காட்சி நிகழ்வு கொண்டிருக்கும் இலங்கை மிகவும் பிரகாசமான வாய்ப்புடன் சீராக விஸ்தரிப்படைந்து வருகின்ற பிராந்தியப் பொருளாதாரங்களில் ஒன்றின் அனுபவங்களை ஆராய விரும்புகின்ற உற்பத்தியாளர்கள்.

சேவை வழங்குநர்கள் விநியோகத்தர்கள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் புத்தாக்குநர்கள் போன்ற தரப்பினரை இந்நிகழ்வின் பல்வகைப்பட்ட இறக்குமதியாளர்கள், கண்காட்சியாளர்கள் தளம் வெகுவாக ஈர்க்கின்றது.