Toronto Police officers charged in ‘Project South’: Police | Chief calls corruption case ‘most concerning’ in his career
Share
ரொறன்ரோ காவல்துறை அதிகாரிகள் ‘Project South’ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டமை: தனது வாழ்க்கையில் ‘மிகவும் கவலைக்குரியது’ என்று தெரிவித்த காவல்துறைத் தலைவர்!
Four Police ‘Officers?’ will be suspended without pay. –
Toronto police Chief Myron Demkiw said.
முக்கியமான நான்கு குற்றவாளிகளான பொலிசார் சம்பளமற்ற வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்வுள்ளனர் என ரொறன்ரோ தலைமை பொலிஸ அதிகாரி தெரிவிப்பு!

தங்கள் நாடுகளில் உயிருக்கு உத்தரவாதமில்லை. நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்ள இயலவில்லை. இனம் சார்ந்த மற்றும் மதங்கள் தொடர்பான அடக்கு முறைகள் உள்ளன போன்ற காரணங்களால் வெளிநாட்டவர்கள் அமைதியைத் தேடி கால்பதிக்கும் கனடிய தேசத்தில் ‘வேலியே பயிரை மேய்கின்றதா? என்று மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களே குற்றச் செயல்களிலும் ஊழல் போன்றவற்றிலும் போதை வஸ்த்து கடத்தலிலும் ஈடுபட்ட காரணத்தால் தற்போது கனடா எங்கும் பேசு பொருளாக விளங்கும் ரொறன்ரோ மாநகர பொலிஸ் பிரிவில் பணியாற்றும் ஏழு பொலிஸ் அதிகாரிகள்? (இவர்களை பொலிஸ் அதிகாரிகள் என்று அழைப்பது இனிமேலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதா என்று நாம் யோசிக்க வேண்டும்) தொடர்பான மேலதிக விபரங்களை இந்தப் பக்களில் எமது வாசகர்களுக்காத் தரலாம் என்றநோக்கத்தோடு ஆரம்பிக்கின்றோம்
இந்த மிகப்பெரிய குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணையில் ஏழு ரொறன்ரோ மாநகர காவல்துறை அதிகாரிகள்? மற்றும் ஒரு ஓய்வுபெற்ற கான்ஸ்டபிள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகிய நாளிலிருந்து கனடாவின் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் சந்தேகங்கள் வலுக்கும் நிலையில உயர் அதிகாரிகள் பலர் கலக்கமடைந்தவர்களாக ஊடகங்களுக்கு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றார்கள்

*ரொறன்ரோ மாநகர பொலிஸ் பிரிவின் அதி உயர் தலைமை அதிகாரியான மைரான் டெம்கிவ் இந்த கைதுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் மூலமாக – இதுவரை மொத்தம் 27 குற்றவாளிகள் கைது செய்யப்படும் அளவிற்கு எம்மைஅழைத்துக் கொண்டு சென்றுள்ளது. அத்துடன் எனது 35 ஆண்டுகளுக்கும் மேலான காவல்துறை பணி வாழ்க்கையில் நான் சந்தித்துள்ள மிக மோசமான குற்றவியல் வழக்குகள் இவை என்று கூறினார்.*
*ரொறன்ரோ மாநகர பொலிஸ் பிரிவின் அதி உயர் தலைமை அதிகாரி டெம்கிவ் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டக் கூடிய அளவில் பாடுபட வேண்டிய ஒரு நேரம் வந்துள்ளது என்று ரொறன்ரோ மாநகர மேயர் ஒலிவியா சோவ் கூறினார்.*
*ரொறன்ரோ நகர பொலிஸ் பிரிவிற்கு வெளியே உள்ள யோர்க் பிராந்தியத்தில் உள்ள ஒரு வீட்டில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதை போலீசார் நிறுத்தியதாக காவல்துறை கூறியதை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியில் ஜூன் 2025 இந்த பாரிய ஊழல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன! *
இவ்வாறு இந்த கைதுகளுக்கு ‘பிள்ளையார் சுழி போட்ட யோர்க் பிராந்திய பொலிஸ் பிரிவின் தலைவர் மற்றும் அர்ப்பணிப்புள்ள பொலிஸ் அதிகாரிகளின் முயற்சியினாலும் ரொறன்ரோ பொலிஸ் பிரிவின் கடமை உணர்வுள்ள பொலிஸ் அதிகாரிகளினாலும் மேற்கொள்ளப்பறற்ற விசாரணைகள் மற்றும் கைதுகள் காரணமாக மோசமான குற்றவாளிகள் என்று கருதப்பட்டவர்களின் ஏழு ரொறன்ரொ மாநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற கான்ஸ்டபிள் மற்றும் ஏனைய சுமார் 15 தனிநபர்களான குற்றவாளிகள் ஆகியோர் மீது பெரிய அளவிலான ஊழல் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இது குற்றவியல் சம்பவங்கள் மற்றும் ஊழல் போதைப் பொருள் வியாபாரம் ஆகியவை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவல்கள் கசிந்து, எவ்வாறு இந்த குற்றவாளிகள் கூட்டாக மிரட்டி பணம் பறித்தல், துப்பாக்கிச் சூடு மற்றும் வர்த்தக நிலையங்களை கொள்ளையிடுவது போன்ற குற்றச் செயல்களுக்கு வழிவகுத்தது என்று யார்க் பிராந்திய காவல்துறைத் தலைவர் Jim MacSween 5ம்; திகதி வியாழக்கிழமை அறிவித்தார்
அப்போது அவரோடு

ரொறன்ரோ மாநகர காவல்துறை உ யர் அதிகாரியான Chief Myron Demkiw, யோர்க் பிராந்திய பிரதித் தலைமை அதிகாரி Ryan Hogan வியாழக்கிழமை யோர்க் பிராந்திய பொலிஸ் பிரிவின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது முன் சொன்ன விடயங்களையும் பின்வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விடயங்களையும் தெரிவித்தார்.
‘ தெற்கிற்கு உரிய திட்டம்’ என்று
ப்ராஜெக்ட் சவுத் என்று அழைக்கப்படும் மேற்படி ஏழு மாத கால தொடர் இரகசிய விசாரணைகளின் இறுதியில் , ரொறன்ரொ மாநகர காவல் சேவையின் வரலாற்றில் குற்றவியல் ஊழல் தொடர்பான மிகப்பெரிய விசாரணைகளில் ஒன்று என கண்டுபிடிக்கப்பட்டது முக்கியமான விடயமாகும். அந்தளவிற்கு ‘வேலியே பயிரை மேயும்’ வகையில் குற்றவாளிகளாக மாறிய ‘அதிகாரிகள்’ குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது
இதில் நீண்டகால கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜென்ட்கள் மற்றும் இளைய அதிகாரிகள் உள்ளனர். இந்த விசாரணைகளின் அடிப்படையில் ரொறன்ரோ இளைஞர் சீர்திருத்தப் பணியாளரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுவதற்கும், வாகனங்கனை திருத்தம் செய்யும் இடங்களுக்கு எடுத்துச் செல்லும் இழுவை வண்டித் துறையுடன் தொடர்புகள் இருப்பதாகவும், சட்டவிரோத கஞ்சா மருந்தகங்களை ஆதரிப்பதற்காக லஞ்சம் வாங்க திட்டமிட்டதாகக் கூறப்படுவதற்கும் வழிவகுப்பட்டு மிகப் பெரிய அளிவிலான குற்றங்களை செய்வதற்கும் மற்றவர்கள் அந்த குற்றங்களில் ஈடுபடுவதற்கும் வழி வகுத்துள்ளதாக மேற்படி பொலிஸ் பிரிவுகளின் அதிகாரிகள் தங்கள் உரைகளின் போது தெரிவித்துள்ளார்கள்.
ரொறன்ரோ மாநகர காவல்துறைத் தலைவர் மைரான் டெம்கிவ் இந்த மாபெரும் குற்றச் செயல்கள் தொடர்பான விடயங்களை முதலில் அ அறிவிக்கத் தொடங்கினார். வழக்கை அழைத்தார் -அப்பொழுது அவர் “இதுவரை 27 கைதுகள் மற்றும் 170 குற்றச்சாட்டுகள் தொடர்பான விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட சாதாரண குற்றவாளிகள் மூலமாகவே கொலைச் செயல்கள் நடத்தப்பட்டன என்றும் அத்துடன் $600,000 க்கும் அதிகமான ரொக்கம் மற்றும் நான்கு சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன -என்றும் இது அவரது 35 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையில் அவர் கண்ட மிகக் கடுமையானதும் நினைத்துப் பார்க்க முடியாததுமான குற்றவியல் வழக்குகள் என்றார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் “நான் தலைவராக இருந்த காலத்தில் இந்த துரோகம் நிறைந்த குற்றவியல் வழக்குகள் நிச்சயமாக மிகவும் கவலைக்குரிய மற்றும் மிக முக்கியமான தொழில்முறை தரநிலைகள் உள் விவகார விஷயமாகும், மேலும் ரொறன்ரோ மா நகரில் ஒரு காவல்துறை அதிகாரியாக எனக்கு அதிர்ச்சியை தரும் விடயம்,” என்று அவர் யோர்க் காவல் தலைமையகத்தில் வியாழக்கிழமை 5ம் திகதி காலை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“இது அனைவருக்கும் ஒரு வேதனையான மற்றும் அமைதியற்ற தருணம்,” என்றும் அ அவர் தயக்கத்துடன் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் நான்கு போலீசார் ஊதியம் இல்லாமல் பதவிஇடைநீக்கத்தை எதிர்கொள்கின்றனர்.என்றும் அது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுக்களுக்கு உரியவை என்பதற்கான காரணம் இதுதான் என்றார்.
விசாரணையை வழிநடத்திய அதிகாரிகளில் ஒருவரான யோர்க்,பிராந்திய காவல்துறைத் தலைவர் ஜிம் மேக்ஸ்வீன், இந்த செய்தியை “அதிர்ச்சியூட்டும் மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கண்டிப்புடன் தெரிவித்தார்.
“காவல்துறையில் ஊழலுக்கு இடமில்லை,” என்றும் அவர் உரத்துக் கூறினார்.
பொதுமக்களுக்காக பின்வரும் விடயங்களை நான் பகிர்ந்து கொள்கின்றேன் என்று கூறிய அவர் “இந்தச் செய்தியைப் பற்றி நீங்கள் அதிர்ச்சியடைந்து, குழப்பமடைந்து, கோபமாக உணரலாம் என்பது எனக்குத் தெரியும் … இந்தக் கண்டிக்கத்தக்க குற்றங்களுக்குப் பொறுப்பான அனைவரையும் அடையாளம் கண்டு, கைது செய்து, வழக்குத் தொடர நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். என்று தெரிவித்த அவர் யோர்க் பிராந்தியத்தில் உள்ள வீட்டில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக போலீசார் கூறியதை அடுத்து, ஜூன் 2025 இல் விசாரணை தொடங்கியது என்றும் ஆரம்பத்தில் இவ்வளவு கொடிதான குற்றச்செயல்களில் எமது பொலிஸ் அதிகாரிகள்? சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்த போது எமக்கு பதட்டமும் கோபமும் ஏற்பட்டது தவிர்க்க முடியாமல் இருந்தது என்றார்.
டொராண்டோ நிறுவனத்தில் பணிபுரிந்த “திருத்த மேலாண்மை உறுப்பினரை” குறிவைத்து கொலை செய்ய சதி செய்ததாக துணைத் தலைவர் ரியான் ஹோகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எமது விசாரணைகள் தொடங்கிய அந்த ஜூன் மாதம் 3ஒரு நாள் 6 மணி நேரத்திற்குள், பல சந்தேக நபர்கள் அந்த இளையோர் சீர்திருத்தப் பணிப்பாளரின் வீட்டிற்குச் சென்றனர், இது “அவரைக் கொலை செய்வதற்காக” மாத்திரமே என்று போலீசார் குற்றம் சாட்டியுளளனர்.
ஜூன் 20, 2025 அன்று, மூன்று பேர் முகமூடி அணிந்த நிலையில், திருத்தப் பணியாளரின் வீட்டிற்கு வந்து, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கியுடன், ஓட்டிச் சென்ற ஒரு போலீஸ் வாகனத்துடன் மோதியதாக ஹோகன் பத்திரிகையாளர் சந்திப்பில் கண்காணிப்பு காட்சிகளை முன்வைத்து குற்றம் சாட்டினார். இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு வளர்ந்தவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் அன்று கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 2025 சம்பவத்திற்கு முன்பு, டொராண்டோ கான்ஸ்டபிள் டிமோதி பார்ன்ஹார்ட் என்பவர் ஒரு போலீஸ் தரவுத்தளத்தை சட்டவிரோதமாக அணுகி, ரகசியத் தகவலை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டதாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டினர்.
“பல வழக்குகளில்”, கான்ஸ்டபிள் பார்ன்ஹார்ட் மற்றும் பிற காவல்துறை அதிகாரிகளால் சட்டவிரோதமாக விசாரிக்கப்பட்ட முகவரிகள் பின்னர் குற்றங்களின் இடங்களாக மாறியதாக புலனாய்வாளர்கள் கண்டுபிடித்ததாக யோர்க் காவல்துறை தெரிவித்துள்ளது – “கப்பம் பறித்தல், வணிகக் கொள்ளைகள் மற்றும் துப்பாக்கிச் சூடு உட்பட”, பலகுற்றச்சாட்டுகளில் இந்த பொலிஸ் அதிகாரி ஈடுபட்டமை எம்மால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில காவல்துறை அதிகாரிகள் சட்டவிரோத கஞ்சா விற்பனை இடங்களை ஆதரிக்கவும், “அந்த இடங்களில் எடுக்கப்படும் எந்தவொரு அமலாக்க நடவடிக்கையையும் தடுக்க லஞ்சம் பெறவும்” பிரையன் டா கோஸ்டா என்ற நபரால் “வழிநடத்தப்பட்ட” ஒரு திட்டமும் இருந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிசாருடன் இணைந்து பாரிய குற்றச் செயலுக்கான அடித்தளத்தளத்தை இடுவதற்கு திட்டங்கள் தீட்டினர் என்றார்.
மேற்படி குற்றசாட்டுகளில் முக்கிய பாத்திரவாளியாக கான்ஸ்டபிள் பார்ன்ஹார்ட் இருந்ததாகவும் அவர் அணுகியதாகக் கூறப்படும் ரகசியத் தகவல்களில் சிலவற்றையாவது வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு தனி நபர் 23 வயதான இன்னிஸ்ஃபில் குடியிருப்பாளர் கெய்ஜீன் டோமன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
5ம் திகதி வியாழக்கிழமை காலை, நடைபெற்ற மேற்படி பத்திரிகையாளர்கள் சந்திப்பில். ரொறன்ரோ காவல்துறைத் தலைவர் மைரான் டெம்கிவ், ஒன்ராறியோவின் காவல்துறையினர் தங்கள் சக உத்தியோகத்தர்களை எவ்வாறு கண்காணிப்பு செய்கிறார்கள் என்பதில் ஒரு புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தினார் –
மேற்படி பாரிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஐந்து ரொறன்ரோ காவல்துறை கான்ஸ்டபிள்கள், இரண்டு சார்ஜென்ட்கள் மற்றும் ஒரு ஓய்வுபெற்ற அதிகாரி, தனிநபரான அவரது மகன் ஆகியோர் விசாரணையில் சம்பந்தப்பட்டுள்ளார், அவர்கள் மீது இப்போது போதைப்பொருள் கடத்தல், நம்பிக்கை மீறல், நீதியைத் தடுக்க சதி செய்தல் மற்றும் லஞ்சம் வாங்குதல் உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஐந்து ரொறன்ரோ போலீஸ் கான்ஸ்டபிள்கள், இரண்டு சார்ஜென்ட்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஒரு அதிகாரியின் மகனும் விசாரணையில் சிக்கினார்கள். அவர்கள் மீது எண்ணிக்கையற்ற கணக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன, அவற்றில் போதைப்பொருள் கடத்தல், நம்பிக்கை மீறல், நீதியைத் தடுக்க சதி செய்தல் மற்றும் லஞ்சம் வாங்குதல் ஆகியவை அடங்கும்.
இவ்வாறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டவர்களில் ரொறன்ரோ போலீஸ் கான்ஸ்டபிள் டிமோதி பார்ன்ஹார்ட், வயது-56, சார்ஜென்ட் ராபர்ட் பிளாக், வயது-42, கான்ஸ்டபிள் ஜான் மேட்லி ஜூனியர், வயது-29, கான்ஸ்டபிள் கார்ல் கிரெல்லெட், வயது- 49, கான்ஸ்டபிள் சவுரப்ஜித் பேடி, வயது-38, கான்ஸ்டபிள் டெரெக் மெக்கார்மிக்,_வயது- 57, கான்ஸ்டபிள் எலியாஸ் மௌவாட், வயது-24, மற்றும் ஓய்வுபெற்ற கான்ஸ்டபிள் ஜான் மேட்லி சீனியர், வயது-55, ஆகியோர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நபர்களில் அடங்குவார்கள் எனவும் மேற்படி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்கள்.
“உண்மை என்னவென்றால், எங்கள் அதிகாரிகளில் மிகச் சிலரே இந்தக் கடுமையான குற்றச் செயல்களைச் செய்கிறார்கள்,” என்று பெடர்சன் கூறினார். “எனவே, இதுவரையிலும் எந்தவொரு காவல்துறைத் தலைவரும் ஊதியமின்றி இடைநீக்கம் செய்யும் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை. மிகவும் வெளிப்படையாகச் சொன்னால், எங்கள் காவல்துறை உத்தியோகத்தர்களில் பெரும்பாலோர் தங்கள் வேலைகளை மிகுந்த மரியாதையுடன் செய்கிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் வாரங்களில் அல்லது மாதங்களில் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குகளின் ஊடாக மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் எனவும் அன்றை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தெரிவிக்கப்பெற்றது.
Uthayan -LJI Journalists Ganesh and Arjune




















