LOADING

Type to search

உலக அரசியல்

போராட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறை – மன்னிப்புக் கோரும் ஈரான் அதிபர்

Share

ஈரானில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்தாண்டு டிசம்பரில் தொடங்கிய போராட்டம், பின்னர் அந்நாட்டு ஆட்சிக்கு எதிரான போராட்டமாக மாறியது. இதனால் அரசுக்கும் – மக்களுக்கும் இடையே கடும் மோதல்போக்கு நிலவியது. இதனால் போராட்டக்காரர்கள் மீது அரசு தாக்குதலையும் தொடுத்தது. போராட்டக்காரர்கள் மீதான அரசின் அடக்குமுறைக்கு நாடு தழுவிய அளவில் கடும் அதிருப்தி நிலவி வந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன. தற்போதுவரை இந்த போராட்டங்களினால் சுமார் 3000 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட கடுமையான ஒடுக்குமுறை மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன். ஈரானின் 47-வது புரட்சி தின விழாவில் உரையாற்றிய அவர், போராட்டங்களின்போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும், நடந்த சம்பவங்களுக்காக தாங்கள் “வெட்கப்படுவதாகவும்” குறிப்பிட்டார். “நாங்கள் மக்கள் முன் வெட்கப்படுகிறோம், இச்சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், நாங்கள் மக்களுடன் மோதலை விரும்பவில்லை.” என்று தெரிவித்தார்.