LOADING

Type to search

இலங்கை அரசியல்

குப்பை போடுபவர்களுக்கு எதிராக நல்லூர் பிரதேச சபை மேற்கொண்ட செயற்பாடு வெற்றி!

Share

பு.கஜிந்தன்

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுக்கும் முகமாக முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11 பொது இடங்;களை அடையாளப்படுத்தி அங்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு கழிவு கொட்டுபவர்கள் அடையாளப்படுத்தி அபராதம் அறவிடப்படும் பணிகள் நல்லூர் பிரதேச சபையினால் தொடர்;ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகளைக் போடுகின்ற செயற்பாடுகள் வெகுவாகக் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த ஏற்றமிகு செயற்பாட்டினை முன்னகர்த்துவதற்கு ஏற்றவகையில் பொது இடங்களில் கழிவுகளை போடுபவர்களை அடையாளம் காணப்பதற்கு நல்லூர் பிரதேச சபைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற நல்லூர் பிரதேச செயலகம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், இலங்கை மின்சார சபை, மற்றும் கிராம சேவையாளர்கள் அனைவருக்கும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் நன்றிகளை தெரிவித்தார்.