LOADING

Type to search

இந்திய அரசியல்

காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையே பனிப்போர் நடக்கிறது – டிடிவி தினகரன்

Share

மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”5,000 அல்ல, 50,000 அறிவித்தாலும் மக்களை ஏமாற்ற முடியாது. குறிப்பாக இளஞர்கள் வேலைவாய்பு, போதை காலச்சாரம் ஒழிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. அதிமுக ஓர் அணியில் இணைத்து விட்டோம். திமுகவுக்கு பயம் வந்து விட்டது. தேர்தல் பயணத்தில் தோல்வி பயத்தில் 5,000 வழங்க பட்டது, கடை தேங்காய் எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்தது போல் உள்ளது என்றார். 7, 8 ஆண்டுகளாக அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று நினைத்த அனைவரும் ஒன்று இணைய வேண்டும். விரைவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து குறைகளும் நீக்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த முறை தமிழகத்தில் அம்மாவின் மக்களாட்சி வர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். தமிழகத்தில் திமுக ஊழல் ஆட்சி அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.” இவ்வாறு அவர் பேசினார்.