LOADING

Type to search

சினிமா

சந்தீப் கிஷனுக்கு ஜோடியாகும் ரித்திகா நாயக்?

Share

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் சுந்தீப் கிஷன். தற்போது அவர் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

‘ரௌடி பெல்லோ’, ‘சலோ மோகனா ரங்கா’, சமீபத்தில் வெளியான ‘கேங்க்ஸ் ஆப் கோதாவரி’ ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ண சைதன்யா இந்த புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சுந்தீப் கிஷனுக்கு ஜோடியாக ‘ஹாய் நான்னா’, ‘மிராய்’ படங்களின் மூலம் கவனம் பெற்ற ரித்திகா நாயக் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் கதாநாயகியின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது முன் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.