மகிந்தவின் சட்டத்தை தமிழ் மக்களுக்கு எதிராக செற்படுத்தும் இரா.சாணக்கியன்
Share
ஈ.பி.டி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு
(கனகராசா சரவணன்)
கடந்த காலத்தில் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த போது அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிராக குரல்கொடுத்து ஊடக சுதந்திரம் இருக்கின்றது ஊடகவியலாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரமுடியாது ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என குரல் கொடுத்த சாணக்கியன் என்னும் ‘சத்தியவான்’ இன்று அதே நிகழ் நிலை காப்பு சட்டத்தை பயன்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகங்கள் மற்றும் 50 இளைஞர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஊடக சுதந்திரத்தை கழுத்தில் பிடித்து நசுக்க முயற்சி செய்கின்றார்.
மகிந்தராஜபக்ஷ அரசாங்கத்தின் உண்மைகளை வெளிக் கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது போன்ற அதே சட்டத்தை அந்த கட்சி அரசியலில் இருந்து வந்த இரா.சாணக்கியன் இன்று வடகிழக்கில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு எதிராக கொண்டுவந்து வழக்கு தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றார். எனவே நீதிமன்றத்தில் நிறுத்துகின்ற இவருக்கு எதிர்வரும் தேர்தலில் இளைஞர் யுவதிகள் பாடம் புகட்டவேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்திலுள்ள அவரது காரியாலயத்தில் 18ம் திகதி அன்று புதன்கிழமை (18) இடம்பெற்று ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன ஊடக சுதந்திரத்துக்காக தமிழ்தேசியத்துக்காக குரல் கொடுக்கும்; ஒருவர் நாடாளுமன்றத்தில் ஊடகங்களுக்கு மட்டும் குரல் கொடுப்பார். அந்த குரல்களை கொடுத்த பின்னர் அவர் சம்மந்தப்பட்ட உண்மைகளை ஊடகங்கள் வெளிக் கொண்டுவந்தால் ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறையை பாவிப்பார்.
அவ்வாறான அவர் நிகழ் நிலை காப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது அதற்கு எதிர்த்து குரல்கொடுத்தாhர் அவ்வாறு குரல் கொடுத்து தமிழ் மக்கள் மத்தியில் தான் தமிழ் மக்களுக்காக கஷ்டப்படுவதாகவும் அவர்களின் உரிமைக ளுக்காக போராடுவதவாக காட்டிக் கொள்வார்.
கடந்த காலத்தில் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிசார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த போது அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிராக குரல்கொடுத்து ஊடக சுதந்திரம் இருக்கின்றது ஊடகவியலாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரமுடியாது ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என குரல் கொடுத்துவிட்டு இன்று அதே நிகழ் நிலை காப்பு சட்டத்தை பயன்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகங்கள் மற்றும் 50 இளைஞர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஊடக சுதந்திரத்தை கழுத்தில் பிடித்து நசுக்க முயற்சி செய்கின்றார்.
எனவே இதில் பார்க்க வேண்டிய விடையம் என்னவென்றால் தமிழில் ஒரு பழமொழி இருக்கின்றது தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்று கடந்த காலத்தில் மகிந்தராஜபக்ஷ அரசாங்கத்தில் அவருடைய உண்மை தனன்மையை வெளிக் கொண்டுவந்த பல ஊடகவியலாளர்கள் படுnhகாலை செய்யப்பட்டதுடன் பலர் கடத்தபட்டு காணாமல் ஆக்கப்பட்டனர் அதே சட்டத்தை தான் இன்று இரா.சாணக்கியன் பயன்படுத்துகின்றார்.
இதற்கு காரணம் கடந்த காலத்தில் ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்து வந்த இவர் அந்த கட்சின் ஊடாகத்தான் அரசியலில் நுழைந்தவர் ஆதலால் மகிந்தவுடன் இருந்த இவருக்கு தெரியும் உண்மை தன்மைகளை வெளிக் கொண்டுவந்தால் அவர்களுக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ எவ்வாறு ஈடுபட்டார்
இவ்வாறான இவர் நிகழ் நிலை காப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு;களை தெரிவித்து கையொழுத்து வேட்டைகளை செய்து ஊடக சுதந்திரத்துக்காகவும் தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்கின்ற இவர் உண்மையாகவே தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதில்லை இவருடைய நாடாளுமன்ற கதிரைகளை தக்க வைப்பதற்காக இவர் குரல் கொடுக்கின்றாh. எனவே அவரின் உண்மை தன்மைகளை வெளிக் கொண்டுவந்த ஊடகங்களையும் இளைஞர்களுக்கும் அச்சுறுத்துவதை கவன்மையாக கண்டிக்கதக்கது.
சட்டமா அதிபர் மற்றும் சட்டமா திணைக்களத்திடம் தயவாக வேண்டிக் கொள்வது இந்த இளைஞர்களுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்குகளை கூடுதல் கவனம் செலுத்தி இதனை துரித கதியில் முடிவுக்கு கொண்டுவர உதவி செய்ய வேண்டும் அதேவேளை ஊடக சுதந்திரத்துக்காக கூடிய கவனம் செலுத்த வேண்டும் என கோருகின்றோம்.
அதேவேளை ரணில் விக்கிரமசிங்காவினால் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 400 மில்லியன் ரூபா இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டது இதில் குளத்தில் மைதானம் அமைத்தது மற்றும் அரச அங்கீகாரம் இல்லாத பதியப்படாத இடங்களுக்கு நிதியை வழங்கினார்.
இதனை நான் ஊடகங்கள் ஊடாக உண்மை தொடர்பாக சுட்டிக்காட்டி வெளிக் கொண்டுவந்து இந்த மோசடி தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்ததன் காரணமாக என்னை பழிவாங்க வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்ட அவர்.
நான் களுவங்கேணியில் குத்தகை அடிப்படையில் சட்டரீதியாக பெற்று இயங்கிவந்த மீனவர்களுக்கு சொந்தமான மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டும் என அபிவிருத்தி குழு கூட்டங்களில் உண்மைக்கு புறம்பாக அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தைநான் சட்டவிரோதமாக இயக்கிவருவதாக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி கடற்றொழில் நீரியல் வளத்துறை உதவி பணிப்பாளருடன் இனைந்து மண்ணெண்ணை விநியோகத்தை கடந்த வருடம் யூலை 21ம் திகதி துண்டித்தார்.
இது அவருக்கு எதிராக உண்மையை வெளிக் கொண்டுவந்து குரல் கொடுத்து முறைப்பாட்டடை செய்ததன் காரணமாக எனது குரல் நசுக்கப்பபட்டு எனது தொழிலும் முடக்கப்பட்டுள்ளது னவே இவ்வாறான செயற்பாட்டை இரா. சாணக்கியன் நிறுத்தி கொள்ளவேண்டும்
அதேவேளை இன்று களுவங்கேணியில் இருக்கின்ற எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுள்ளனா. இந்த ஆதாரம் அற்ற இந்த பொய்குற்றச்சாட்டை மட்டு மாவட்ட அரசாங்க அதிபர். கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் எடுத்து தவறான முடிவினால் இந்த மீனவர்கள் பாதிக்கபட்டுள்ளனர் எனவே இதற்கான முழு பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்
கடந்த காலத்தில் களுவங்கேணி மீனவர்கள் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் தங்களுக்கு வேண்டாம் என வர்த்தமாணி ஊடாக வெளியிடப்பட்டு துறைமுக அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டு இயங்கா நிலையில் இருந்தது .
இதனை நான் இரத்து செய்து மீண்டும் மீனவர்களுக்கு பெற்றுக் கொடுத்து அந்தபகுதியில் இருக்கும் 3 இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கி மீனவர் சங்கத்துக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா வாடகை கொடுத்து நடாத்தி வந்தேன் என்னை பழிவாங்கும் முகமாக மண்ணெண்ணை விநியோகத்தை துண்டித்துள்ளனர்
வீட்டு சின்னத்தில் எருமை மாட்டை நிறுத்தி அதற்கு வாக்கு போட சொன்னால் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் கண்ணை மூடி வாக்களிப்பார்கள் எருமை மாடு பின்னர் என்ன செய்யும் என்பதை தமிழ் மக்கள் உணரவேண்டும்.
எனவே அன்பான தமிழ் மக்களே வடகிழக்கில் வாழும் இளைஞர்;. யுவதிகளே தேர்தல்; காலங்களில் வாக்குகேட்டு வருபவர்கள் உண்மையாக தமிழ் தேசியம் பேசுகின்றவர்களா? தமிழ் மக்கள் மீதும் தமிழ் மண் மீதும் பற்றுக் கொண்டவர்களா? என பார்த்து வாக்களிக்க வேண்டும் என்பதுடன் எதிர்வரும் தேர்தலில் இவ்வாறு தமிழ் இளைஞர்களை நீதிமன்றத்தில் நிறுத்துகின்ற இவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார்.




















