LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்து வைத்தது!

Share

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் நாவலடியில் உள்ள அன்னாரது நினைவு தூபியில் சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி மாதத்தை 19ம் திகதி அன்று வியாழக்கிழமை (19) ஆரம்பித்து வைத்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலமையில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் அழகையா தேவகுமார், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அன்னை பூபதி அம்மாவின் சமாதியில் நிழல் படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர்தூவி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி மாத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து அன்னையில் மகள் மற்றும் உறவினர்கள் சமாதியில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்லர் ஆலைய முன்றலில் கடந்த 1988 ம் ஆண்டு மார்ச் 19 ம் திகதி இந்திய இராணுவத்தை வெளியேறுமாறும் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்தை நடாத்துமாறு 9 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து 32 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஏப்பிரல் 19 ம் திகதி எயிர்நீத்தார் என்பது குறிப்பிடதக்கது.