LOADING

Type to search

உலக அரசியல்

ஈரான் முற்றிலும் பலவீனமாகி விட்டது..!- இஸ்ரேல் பிரதமர்

Share

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரானுக்கு எதிரான போரில் நாங்கள் அமெரிக்காவை உள்ளே இழுத்துவிட்டோம் என்ற செய்திகள் பரப்பப்படுகின்றன. இது வெறும் வதந்தி மட்டுமல்ல அபத்தமானது. அமெரிக்க அதிபர் டிரம்பிடம் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது சொல்ல முடியும் என உண்மையிலேயே நினைக்கிறார்களா?

டிரம்ப் எப்போதும் அமெரிக்காவிற்கு எது நல்லது என்று நினைக்கிறாரோ, அதன் அடிப்படையிலேயே தனது முடிவுகளை எடுக்கிறார். போரில் நாங்கள் நெருங்கிய ஒருங்கிணைப்போடு மின்னல் வேகத்தில் இலக்குகளை அடைந்து வருகிறோம். நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். ஈரான் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகிறது. மக்கள் நினைப்பதை விட இந்தப் போர் மிக வேகமாக முடிவுக்கு வரும். ஈரான் ஏவுகணைகளை தயாரிப்பதற்கும், அணு ஆயுதங்களை உருவாக்குவதற்குமான பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைத்தான் நாங்கள் இப்போது அழித்துக் கொண்டிருக்கிறோம். யுரேனியத்தைச் செறிவூட்டும் அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கும் திறன் ஈரானிடம் இனி இருக்காது. ஈரான் எப்போதையும் விட தற்போது பலவீனமாக உள்ளது. அவர்களுக்கு எதிரான தாக்குதல் தேவைப்படும் வரை தொடரும். தற்போது ஈரானை யார் ஆட்சி செய்கிறார்கள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. புதிய உச்ச தலைவராக பதவியேற்ற மொஜ்தபா இன்னும் தனது முகத்தை வெளியே காட்டவில்லை. நான் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவுகிறது. நான் உயிருடன் இருக்கிறேன். அதற்கு நீங்கள் அனைவரும் சாட்சி. இவ்வாறு நெதன்யாகு கூறினார்.