LOADING

Type to search

உலக அரசியல்

டிரம்ப் உருவம் பதித்த தங்க நாணயம் – அமெரிக்காவில் புதிய சர்ச்சை

Share

அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிபர் டொனால்ட் டிரம்பின் உருவம் பதித்த 24 காரட் தங்க நாணயத்தை வெளியிடத் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் 250 வது சுதந்திர தின நாளில் இந்த நாணயம் வெளியிடப்பட உள்ளது. ஒருபுறம் டிரம்ப் மேசை மீது சாய்ந்து நிற்கும் உருவமும், மறுபுறம் அமெரிக்கக் கழுகு சின்னமும் கொண்ட இந்த நாணயம், பொதுப் பயன்பாட்டிற்கு இன்றி ஒரு நினைவுப் பொருளாக மட்டுமே அமையவுள்ளது. பொதுவாக உயிருடன் இருக்கும் அதிபர்களின் உருவத்தை நாணயங்களில் பொறிப்பதில்லை என்ற மரபு உள்ளதால், இந்த முடிவு தற்போது அந்நாட்டில் பெரும் அரசியல் மற்றும் சட்ட ரீதியான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.