கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் கல்முனை பிராந்திய இணையம் – கனடா , வட மத்திய மாகாண பொலனருவை பொக்கினை டிரொட்டவெவ தமிழ் வித்தியாலய கல்வி மேம்பாட்டுக்கு உதவியது!
Share
இலங்கையின் வட மத்திய மாகாணத்தின் பொலனருவை மாவட்டம். குடா பொக்கினைரொட்டவெவ தமிழ் கனிஷ்ட வித்யாலயத்தில் சிமாட் ரூம் அமைப்பதற்காக கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பினால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி பாடசாலையின் அதிபர் ஆர். தேவராசா அவர்கள் கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக. 24ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றைய தினம் பாடசாலையில் நடைபெற்ற விசேட வைபவம் ஒன்றில் திரு என். சௌவிய தாசன் மற்றும். ஓய்வு பெற்ற உதவிக் கல்வி பணிப்பாளர் கண வரதராஜன் ஆகியோரால். பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் இந் நிதி கையளிக்கப்பட்டது.
இந்த அற்புதமான கைங்கரியத்தை பலரும் பாராட்டுகின்றனர்.
கல்முனை பிராந்திய இணையம் கனடா அமைப்பின் தலைவராக சமூக செயற்பாட்டாளர் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் செயற்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.















